Connect with us
mgr

Cinema History

படத்தின் தலைப்பை கேட்டு அசந்துபோய் பரிசு கொடுத்த எம்.ஜி.ஆர்.. அட அந்த சூப்பர் ஹிட் படமா!..

Actor MGR: ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியம். ஒரு படத்தின் அடையாளமே அதன் தலைப்புதான். தலைப்பை வைத்துதான் பல வருடங்கள் கழித்தும் அது பேசப்படுகிறது. தலைப்பை நினைத்தாலே அப்படத்தின் கதையும், காட்சியும் நம் மனதில் ஓடவேண்டும். அந்த காலத்தில் தலைப்பு என்பது படத்தின் கதையோடு பொறுத்தமாக இருக்கும்.

பாசலலர், பராசக்தி, உயர்ந்த மனிதன், தெய்வ மகன், அடிமை பெண், உலகம் சுற்றும் வாலிபன் என பார்த்து பார்த்து தலைப்பு வைத்தார்கள். கண்டிப்பாக அப்படத்தின் தலைப்பு படத்தின் கதையோடு ஒட்டியிருக்கும். ஆனால், இப்போதெல்லாம் அப்படி இல்லை. பல திரைப்படங்களில் படத்தின் தலைப்புக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. அஜித் நடித்த வேதாளம், விஸ்வாசம், விவேகம் ஆகிய படங்களின் கதைகளுக்கும் தலைப்பும் என்ன சம்பந்தம் என யோசித்தாலே உண்மை புரியும்.

இதையும் படிங்க: ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய எம்.ஜி.ஆர்!. கோடிகளை குவித்த எவர்கிரீன் சூப்பர் ஹிட் படம்!..

இப்போது பல படங்கள் அப்படித்தான் வெளிவருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான இறைவன் படத்தில் தலைப்புக்கும், கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தலைப்பு நன்றாக இருக்கிறதா என்று மட்டும்தான் யோசிக்கிறார்களே தவிர கதைக்கு என்ன சம்பந்தம் என்பது யாருக்கும் விளங்கவில்லை.

இந்நிலையில், தன்னுடைய ஒரு படத்தின் தலைப்பு கேட்டு அசந்துபோய் தலைப்பை வைத்தவருக்கு எம்.ஜி.ஆர் பரிசு கொடுத்த சம்பவத்தைத்தான் இங்கே பார்க்க போகிறோம். சிவாஜியை வைத்து சபாஷ் மீனா, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா, கர்ணன், முரடன் முத்து போன்ற பல படங்களை இயக்கியவர் பி.ஆர்.பந்துலு. அவர் இயக்கும் பெரும்பாலான திரைப்படங்களை அவரே தயாரித்தார்.

இதையும் படிங்க: ஆபிஸ் பாய் என அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர்… அதையும் தாண்டி சாதித்து காட்டிய எம்.எஸ்.வி…

சில படங்களால் இவருக்கு நஷ்டம் ஏற்பட்ட எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படத்தை தயாரித்து, இயக்க ஆசைப்பட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து பேசியபோது அவரும் அதற்கு சம்மதித்தார். இந்த படத்திற்கு அப்போது பல படங்களுக்கு கதை, வசனம் எழுதிய ஆர்.கே. சண்முகம் அந்த படத்திற்கு கதை வசனம் எழுதினார். அப்படி உருவான திரைப்படம்தான் ஆயிரத்தில் ஒருவன்.

எம்.ஜி.ஆரின் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் இது. ஆயிரத்தில் ஒருவன் என்கிற தலைப்பு ஆர்.கே. சண்முகத்தால் வைக்கப்பட்டது. அவரை அழைத்த எம்.ஜி.ஆர் ‘ஆயிரத்தில் ஒருவன் என தலைப்பு வைத்ததால் உங்களுக்கு ஆயிரத்து ஒரு ரூபாய் பரிசு தரப்போகிறேன்’ என சொல்ல, சண்முகமோ ‘இது முன்பே தெரிந்திருந்தால் லட்சத்தில் ஒருவன் என பெயர் வைத்திருப்பேன்’ என சொன்னாராம். அதைக்கேட்டு சிரித்தாராம் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: கோபத்தில் வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள்!.. பயந்து போன நம்பியார்… ஓடி வந்த எம்.ஜி.ஆர்..

google news
Continue Reading

More in Cinema History

To Top