அடுத்தது ‘இதுக்கும் மேல’!...ஐயோ பார்த்திபன் என்ன செய்யப்போறாரோ தெரியலயே!....

by Manikandan |
அடுத்தது ‘இதுக்கும் மேல’!...ஐயோ பார்த்திபன் என்ன செய்யப்போறாரோ தெரியலயே!....
X

தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே இவரை விட படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் படைப்பாளி யாரும் இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். அந்த அளவுக்கு தனது படங்களில் கதை இல்லாமல், மற்ற நடிகர் - நடிகைகள் இல்லாமல், ஒரே ஷார்ட் என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமாக யோசித்து படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் நடிகர் பார்த்திபன்.

இவர் இயக்கத்தில் கதை இல்லாமல் வெளியான திரைப்படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', மற்ற நடிகர்கள் யாரும் இல்லாமல் தான் மட்டுமே நடித்து வெளியான திரைப்படம் 'ஒத்த செருப்பு', உலகின் முதல் 'நான்லீனியர் சிங்கிள் ஷாட்' திரைப்படம். அதாவது, வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு கதை கோணங்களில் எந்தவித காட்சி கட் இல்லாமல் கதை சொல்கிறது 'இரவின் நிழல்'.

ஒவ்வொரு படத்திற்கும், இனி பார்த்திபன் அவ்வளவுதான். இதை தாண்டி யோசிக்க முடியாது என்று பலரும் கருத்து கூற, அதனை அடுத்தடுத்த படங்களில் உடைத்து காட்டி வருகிறார் பார்த்திபன்.

இதையும் படியுங்களேன் - அறிமுகம் கொடுத்தவருக்கே அல்வா கொடுத்த சிவகார்த்திகேயன்.. இதெல்லாம் எங்க போய் முடியபோகுதோ.?!

அப்படி அடுத்த படத்தில் பார்த்திபன், முழுக்க முழுக்க விலங்குகளை வைத்து முழு படத்தையும் எடுக்க உள்ளாராம். அதுவும் இந்த திரைப்படத்தில் அனிமேஷன் எதுவும் இல்லையாம். ஒரிஜினல் விலங்குகளை வைத்து இந்த படத்தை இயக்க பார்த்திபன் முடிவெடுத்து உள்ளாராம்.

நமது நாட்டில் விலங்குகளை துன்புறுத்தும் படியாக, விலங்குகளை வைத்து படம் எடுப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இந்த நிலைமையில் முழுக்க முழுக்க விலங்குகளை வைத்து பார்த்திபன் எப்படி தான் படம் எடுக்க போகிறாரோ என்று கோலிவுட் உலகம் ஆச்சரியமாக பார்த்து வருகிறது.

Next Story