Connect with us
Ajith

Cinema News

கிளப்பிட்டாங்கய்யா… கிளப்பிட்டாங்கய்யா… அஜீத் அரசியலுக்கு வருகிறாரா…? வந்தா விஜய் மாதிரி இருக்காதாம்…!

அஜீத் அரசியலுக்கு வருவார் என பல ஜோசியர்கள் உறுதியா சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இப்ப அந்த நியூஸ் மறைந்து போனது. ஆனா மீண்டும் இதுபற்றிய பேச்சுகள் வர ஆரம்பித்து விட்டது. இதுபற்றி என்ன சொல்றீங்கன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்கிறார். அதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்.

நான் ஒரு ஜோசியர்கிட்ட 5 வருஷத்துக்கு முன்னாடி பேசினேன். ‘அஜீத் கண்டிப்பா அரசியலுக்கு வருவாரு. அவரு மிகப்பெரிசா ஜெயிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு’ன்னு சொன்னாரு. ‘யாரை சொல்றீங்க?’ன்னு திரும்பவும் கேட்டேன். ‘நடிகர் அஜீத் தான்’னு சொன்னாரு. அவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை.

MGR Ajith

MGR Ajith

சினிமாவே அவர் புரொபஷனலா அணுகுபவர். அவருக்கு நிறைய எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்ட் இருக்கு. பைக் ரேஸ்ல ஆர்வம் இருக்கு. குடும்பத்தைப் பத்திரமா பார்த்துக்கிறாரு. எம்ப்ளாயீஸ பார்க்குறாரு. அஜீத்துக்கு எம்ஜிஆர் மாதிரி ஜாதகமாம். அவரோட ஜாதகத்துல அவரு கண்டிப்பா உச்சத்துக்கு வருவாரு. அதனால அரசியல்லயும், மக்கள் பணியிலும் அஜீத் கண்டிப்பா ஈடுபடறதுக்கான வாய்ப்பு இருக்குன்னு அந்த ஜோதிடர் சொன்னாரு. இது அவரோட 50வது வயசுக்கு அப்புறம் வரும்.

அவருக்கான ஒரு கட்டம் இருக்குன்னா அதை நோக்கிப் பயணிக்கிறதுல தப்பு இல்ல. இப்போ விஜய் சாருக்கும் அந்த கட்டம் இருக்கு. சினிமாவுல ஓரளவுக்குத் தான் மக்களோட அன்பு கிடைக்கும். ஆனா பொலிட்டிகல் பவர்ங்கறது மிகப்பெரிய விஷயம். இன்று பவன் கல்யாண் உச்சத்துல இருக்காருன்னா அது மாதிரி உச்சம் கிடைக்க விஜய் சாருக்கும் வாய்ப்பு இருக்கு. நான் கண்டிப்பா அந்த உச்சத்தைத் தொட முடியும்கற நம்பிக்கையில தான் விஜய் சார் அரசியல்ல இறங்கியிருக்காரு.

அஜீத்துக்கும் ஜாதகத்துல பலரும் சொல்றது என்னன்னா அரசியல்ல அந்த வாய்ப்பு இருக்கு. இப்ப அவர் தான் அதை முடிவு பண்ணனும். அரசியலுக்கு 2026ல வரணுமா? 2031லயான்னு. அவர் அதை முடிவு பண்ணிட்டாருன்னா அவரோட அரசியலுக்கான தலைமை ரெடியா இருக்கு. இவரு தனியா கட்சி ஆரம்பிக்கத் தேவையில்லை. இவர் தங்கள் பார்ட்டியில இருந்தா நாம ஜெயிச்சிடலாம்னு அவங்க தயாரா இருக்காங்க. 2026ல வர மாட்டாரு.

இதையும் படிங்க… விஜய் போடும் பக்கா பிளான்… முழுநேர அரசியல் அந்தப் படத்திற்குப் பிறகுதானாம்…! பிரபலம் தகவல்

இது குறுகிய காலம். 2031ல அவரு நினைச்சாருன்னா அவரு வர வாய்ப்பு அதிகமா இருக்கு. மக்களைப் பொருத்தவரை அவருக்கு பெரிய இமேஜ் இருக்கு. வாழு, வாழவிடு என்ற அவரது குறிக்கோள் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. இப்போ விஜய் அரசியல்ல இறங்குறாரு. அதோட தாக்கம் எப்படி இருக்குன்னு கவனிப்பார். அவரைப் பொருத்த வரை 100 சதவீதம் உன்னிப்பாகக் கவனிக்கக்கூடியவர். ஆனால் இப்போதைக்கு எந்த முடிவும் அவர் எடுக்க மாட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆனா அஜீத்துக்கு ஒரு சதவீத ஆர்வம் கூட இப்போது இல்லை. எம்ஜிஆர் மாதிரி அவருக்கான சூழல் வரும்போது அதுவே அவரை அரசியலுக்கு வரவழைத்து விடும் என்கிறார் சித்ரா லட்சுமணன்.

 

 

 

google news
Continue Reading

More in Cinema News

To Top