இதென்ன மேஜிக்? ‘விடாமுயற்சி’யில் அருண்விஜய்யா? அவரே சொன்ன சூப்பரான அப்டேட்

by Rohini |
arun
X

arun

Actor Arunvijay: 90களில் இருந்தே சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரத்தை பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பவர் நடிகர் அருண்விஜய். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் போதுமான அளவு வரவேற்பை பெறவில்லை.

ஆனால் அவருக்கு ஒரு பெரிய டர்னிங் பாயிண்டாக இருந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம். அஜித் நடித்த அந்தப் படத்தில் விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அருண் விஜய். அந்த கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது.

இதையும் படிங்க: கேப்டனுக்கு அப்புறம் ஒரே வருடத்தில் 13 படங்கள்! இவரெல்லாம் நம்ம லிஸ்ட்லயே இல்லையே – யார் அந்த நடிகர் தெரியுமா?

அதுவரை யாருமே அருண்விஜயை அப்படி பார்த்ததில்லை. பெரிய ட்விஸ்டை அந்தப் படத்தின் மூலம் கொடுத்தார். பக்கா ஸ்டைலான வில்லனாகத்தான் தெரிந்தார் அருண்விஜய். அதன் மூலம் இழந்த வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வர நடித்த பெரும்பாலான படங்கள் மக்களை திருப்திப்படுத்தியதாகவே இருந்தன. இந்த நிலையில் பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வரும் அருண்விஜயின் மிஷன் என்ற புதிய படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இதையும் படிங்க: உங்கள வச்சிக்கிட்டு ஒன்னு காப்பி அடிக்க முடியுதா?!.. அயலான் படம் அந்த படத்தோட காப்பியாம்!.

ஏற்கனவே மகிழ்திருமேனி இயக்கத்தில் தடம் என்ற ஒரு தரமான படத்தில் நடித்த அருண்விஜயிடம் விடாமுயற்சி பற்றி கேட்டபோது மகிழ் திருமேனி எப்போதும் என்னிடம் ஒரு தனி அக்கறை கொண்டவர் என்று அருண்விஜய் கூறினார்.

அதுவும் அவர் படத்தின் ஹீரோவை மகிழுக்கு பிடித்துவிட்டால் திரையில் அந்த ஹீரோவை பயங்கரமாக காட்டத் துடிப்பார் என்றும் இப்போது அஜித்துடன் இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு என்றும் அருண்விஜய் கூறினார். அதுவும் மகிழ் வைக்கிற டச்சில் அஜித் சாரோட பிரசன்ஸ் மாஸாக இருக்கப் போகிறது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அயலானுக்கு இந்நேரம் அல்லு விட்டுருக்குமே!.. தனுஷின் கேப்டன் மில்லர் டிரெய்லர் எப்படி இருக்கு?..

இந்த நிலையில் அருண்விஜய் என்று கூகுளில் தேடினால் உங்கள் வருங்கால மூவி லிஸ்ட்டில் விடாமுயற்சி படமும் வருகிறதே. அது உண்மையா? நடிக்கிறீர்களா? என்று கேட்க ‘அப்படியா? அது எனக்கே தெரியாது. ஆனால் இல்லை’ என்று அருண்விஜய் கூறினார்.

Next Story