விக்ரம் படம் மாதிரி ‘கூலி’ படமும் எல்சியூவா? அட ஆமா? ரீவைண்ட் பண்ணி பாருங்க

by Rohini |
coolie 1
X

coolie 1

Coolie Movie:ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி திரைப்படத்தை எடுத்து வருகிறார். விக்ரம் என்ற ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு அதே மாதிரியான ஒரு தரமான படத்தை ரஜினிக்கும் கொடுப்பாரா லோகேஷ் என ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ரஜினியும் அதே நம்பிக்கையில் தான் இருக்கிறார். சில தினங்களாக கூலி திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும் மலையாள நடிகர் சோபி தயாளு என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

இதையும் படிங்க: இசையமைப்பாளர் ஆகலனா இந்த வேலைதான் செஞ்சிருப்பேன்!.. ஓப்பனா சொல்லிட்டாரே இளையராஜா!…

இவர்களுடன் இணைந்து நாகர்ஜுனா ஸ்ருதிஹாசன் போன்ற பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் விக்ரம் படம் மாதிரியே லோகேஷ் இந்த படத்திலும் ஏதாவது ஒரு வகையில் ரஜினியின் பழைய படத்தின் ரிசெம்பலை வைத்திருப்பாரா என ரசிகர்கள் ஒவ்வொன்றாக ஆராய்ந்து வருகிறார்கள்.

அப்படி ஒரு ரசிகர் பிரபல சித்ரா லட்சுமணனிடம் ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதாவது ரஜினி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலாஜி ஒரு கோல்டு ஸ்மக்லராக நடித்திருப்பார். அதில் அவருடைய பெயர் தயாளு.

இதையும் படிங்க: நல்ல கதையை ஓவர் ஆசையில் கெடுத்தது அந்த ஒரே ஹீரோதான்… வெங்கட் பிரபு கொடுத்த ஷாக்…

அதே மாதிரி கூலி திரைப்படத்திலும் மலையாள நடிகர் சோபியும் ஒரு கோல்டு ஸ்மக்லராக அதே தயாளு என்ற பெயரில் தான் நடித்து இருக்கிறார். அதனால் விடுதலை படத்தில் உள்ள சில காட்சிகள் இந்த படத்திலும் இருக்குமா என்ற வகையில் அந்த கேள்வியை கேட்டிருந்தார் .

இதற்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன் எப்படி இந்த மாதிரி எல்லாம் ஆராய்ந்து கேள்வியை கேட்கிறீர்கள் என தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் சொல்வதைப் போல் பொறுத்திருந்து பார்ப்போம் என பதிலளித்திருக்கிறார். விக்ரம் திரைப்படத்திலும் எண்பதுகளில் வெளியான விக்ரம் படத்தில் கமல் ஏஜெண்டாக நடித்திருப்பார்.

இதையும் படிங்க: அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகியிருந்தா கமல்தான் நம்பர் ஒன்!.. மூத்த நடிகர் பேட்டி!…

அதே மாதிரி லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படத்திலும் கமல் ஒரு மறைமுக ஏஜென்டாக நடித்திருப்பார். இரண்டு படங்களுக்கும் சிலசில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்தது. அதேபோல ரஜினியின் பழைய படங்களின் ரிசெம்பல்கள் கண்டிப்பாக இந்த படத்திலும் இருக்கும் என ஒரு பக்கம் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Next Story