ஏற்கெனவே பட்ட அடி பத்தாதா?.. தனுஷ் படத்தில் மீண்டும் களமிறங்கும் பிரச்சினைக்குரிய நடிகர்..

Published on: April 15, 2023
dhanush
---Advertisement---

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ். ஒரு தயாரிப்பாளராக பாடகராக, பாடலாசிரியராக, இயக்குனராக என அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வரும் ஒரு நல்ல கலைஞனாக வலம் வருகிறார். ஒரு முழு ஆளுமை கொண்ட நடிகராக தனுஷ் வளர்ந்து நிற்கிறார்.

இவரின் பக்குவம் தமிழ் சினிமாவிற்கு தேவையான ஒன்று. அதை சரியான விதத்தில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். இந்த சிறு வயதில் இவ்ளோ மனப்பக்குவமா என்று கேட்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்து வரும் தனுஷ் சமீபத்தில் ஒரு அறிக்கை தெரிவித்தார்.

அதாவது மீண்டும் மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைக்கப்போவதாக போட்டோகளுடன் அதிகாரப்பூர்வமான செய்தியை அறிவித்தார். ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் கர்ணன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு மீண்டும் இணைய உள்ள இவர்கள் அடுத்த ஆண்டு தான் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. படத்திற்கான எந்த ஒரு டெக்னீஷியன்ஸும், உதவியாளர்களையும் கமிட் செய்யாத மாரிசெல்வராஜ் படத்தில் நடிகர் வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சிகள் எடுப்பதாக தெரிகிறது.

ஏற்கெனவே மாரிசெல்வராஜுடன் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு நடித்திருக்கிறார். அதனால் கூட இந்த நட்பின் காரணமாக தனுஷ் படத்திலும் கோர்த்து விட்டிருக்கிறார். ஆனால் இந்த செய்தி தனுஷுக்கு தெரியாது போல. ஏற்கெனவே தனுஷ் படமான படிக்காதவன் படத்தில் வடிவேலு சில பிரச்சினைகள் செய்ததால்தான் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போச்சு.

இதையும் படிங்க : அந்த ஒரு பிரச்சினை.. ‘விக்ரம்’ படத்தில் நடிக்க முடியாமல் போச்சு!.. நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டீங்களே மாஸ்டர்!..

அதன் பின் விவேக் நடித்தார். அதை மறந்திருக்க மாட்டார் என தெரிகிறது தனுஷ். அதுவும் மாரி செல்வராஜுடனான அடுத்தப் படத்தை தனுஷ் தான் தயாரிக்க போகிறார். அதனால் வடிவேலுவை பற்றி கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வார் என தெரிகிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.