இவன் டைரக்டரா? இல்ல பொறுக்கியா? அந்த பிரபலத்தை பார்த்து கோபப்பட்ட சிவாஜி..
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எதையும் பட்டென்று பேசி விடுபவர். ஆனால் மனதுக்குள் ஒன்றையும் வைத்துக் கொள்ள மாட்டார். குழந்தை உள்ளம் கொண்டவர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரைப் பொறுத்த வரை காட்சி திருப்தியாக வராவிட்டால் யார் என்றும் பார்க்க மாட்டார். சட்டென்று கோபத்தில் பேசி விடுவார். அதே நேரம் ஒரு சிலரை அடிக்கவும் செய்வாராம். அந்த வகையில் படப்பிடிப்பு ஒன்றில் நடந்த ஒரு சுவையான சம்பவம் பற்றி பார்ப்போம்.
இதையும் படிங்க... டியூன் பிடிக்கலைனு சொன்னதுக்கு இளையராஜா செஞ்ச சம்பவம்! நாசருக்கும் இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா?
படையப்பா படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்ததாம். அப்போது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ரொம்பவே கோபப்படுவாராம். அப்படி தன்னையும் மிஞ்சி அவருக்குக் கோபம் வந்து விட்டால் கெட்ட வார்த்தைகளைப் பேசி விடுவாராம். படையப்பா சூட்டிங்கிலும் அப்படித் தான் கத்தியுள்ளார்.
அப்போது சிலரை கைநீட்டி அடிக்கவும் செய்தாராம். அதைப் பார்த்து விட்டு நடிகர் திலகம் சிவாஜி ரஜினியிடம், 'இவன் டைரக்டரா... இல்ல பொறுக்கியா..?' என்று கூட கேட்டு விட்டாராம். இதை வேறு யாரும் சொல்லவில்லை. சமீபத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளிக்கும் போது சொன்ன விஷயம் தான்.
நாட்டாமை படத்தில் நடந்த இன்னொரு விஷயத்தையும் டைரக்டர் ரவக்குமார் தெரிவித்துள்ளார். அந்தப் படத்தில் ஒரு நீண்ட வசனம் சரத்குமார் பேச வேண்டியிருந்ததாம். அப்போது அவருக்கு அது மறந்து விட்டது. கீழே கிடந்த கல் என்னை ரொம்பவே தொந்தரவு செய்து விட்டது என்று கூறியுள்ளார். அதற்கு ரவிக்குமார் அந்தக் கல்லை எடுத்து 'இந்த சின்ன கல் உங்கள் டயலாக்கை மறக்கடித்து விட்டதா? மறந்து விட்டது என்று நேரடியாக சொல்லுங்கள்' என்று கோபப்பட்டாராம்.
இதையும் படிங்க... ரஜினியுடன் இணையும் சத்யராஜ்… மோடி வேடத்தில் நடிக்கப் போகிறாரா? அவரே சொன்ன ‘நச்’ பதில்
அந்த வகையில் கோபம் எப்பேர்ப்பட்ட ஒரு மனுஷனையும் படுகுழியில் தள்ளிப் புதைத்துவிடும். அவன் கேரக்டரே அதில் அடிவாங்கி விடும். அதன்பிறகு ஒன்றும் செய்ய முடியாது. வார்த்தையை போட்டால் எடுக்க முடியாது. ஆனால் சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி சொல்லும் பாணியில் தான் சொல்ல வேண்டியுள்ளது.