‘தளபதி 68’ இந்த வெப்சீரிஸ் கதையா? - விஜய்க்கு செட் ஆகுமா? குழப்பத்தில் ரசிகர்கள்

by Rohini |   ( Updated:2023-05-24 12:10:22  )
vijay
X

vijay

விஜயின் அடுத்தப் படமான தளபதி 68 படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியான நிலையில் அந்த படம் எந்த மாதிரியான கதையாக இருக்க போகிறது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஏனெனில் பக்கா ஆக்‌ஷன் ஹீரோவான விஜய்க்கு வெங்கட் பிரபு எந்த மாதிரியான கதையை ரெடி பண்ணுவார் என்ற தயக்கமும் இருக்கிறது. ஏனெனில் முழுக்க காமெடி கலந்த ஜோனரிலேயே படம் எடுக்கும் வெங்கட் பிரபுவால் முழு ஆக்‌ஷன் படத்தை கொடுக்க முடியுமா என்ற சந்தேகமும் விஜய் ரசிகர்களுக்கு இருந்து வருகின்றது.

vijay1

vijay1

இன்னொரு பக்கம் வெங்கட் பிரபுவை அஜித்தின் இயக்குனர் என்றே பச்சை குத்தி வைத்திருக்கின்றனர். ஆனால் இப்போது விஜய்க்காக படம் பண்ண வருகிறார் என்றால் கொஞ்சம் மெனக்கிட வேண்டும் என்றும் கருதுகின்றனர். மேலும் ஏற்கெனவே அஜித்தை வைத்து மங்காத்தா 2 படம் கண்டிப்பாக வரும் என வெங்கட் பிரபு சொன்னது அந்த நேரத்தில் அஜித்திற்கு ஒரு சின்ன வருத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனாலேயே அஜித்தின் ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன் விலகியதும் வெங்கட் பிரபுவின் பெயரும் அடிபட அஜித் வேண்டாம் என ஒதுக்கி விட்டாராம்.

அந்த நேரத்தில் விஜய் வெங்கட் பிரபுவை லாக் செய்து விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. மேலும் இந்த படம் கண்டிப்பாக மங்காத்தா 2 கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. சிம்புவின் மாநாடு படம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கொரனா ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. அதனால் படப்பிடிப்பு நின்று போனது.

ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் பெரும்பாலும் சம்பளத்தை கொடுத்திருந்தார். அதன் காரணமாக வெங்கட் பிரபு இருக்கிற ஆள்களை வைத்து உள்ளுக்குள்ளேயே ஒரு வெப் சீரிஸ் பண்ணலாம் என முடிவு எடுத்து அந்த ஒன் லைனை சுரேஷ் காமாட்சியிடம் கூறியிருக்கிறார். ஆனால் சுரேஷ் காமாட்சி மாநாடு படம் எடுக்க எத்தனை வருடங்களானாலும் சரி காத்திருக்கிறேன் என்று சொல்லி இந்த வெப் சீரிஸை வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.

vijay2

vijay2

அந்த வெப் சீரிஸ் ஒன் லைன் தான் தளபதி 68 படத்திற்கான கதையாம். இதை தான் விஜய் ஓகே பண்ணியிருக்கிறாராம். இந்த செய்தியை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார்.

Next Story