ரஜினி மகளை திருமணம் செய்ய இருந்த ஜெயம் ரவி! உண்மையை உடைக்கும் பிரபலம்

by Rohini |   ( Updated:2024-06-29 06:07:41  )
jayam ravi
X

jayam ravi

Jayam Ravi: ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் ஜெயம் ரவி. தன் அண்ணனும் இயக்குனருமான மோகன் ராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட ஜெயம் ரவி தொடர்ந்து அவரது இயக்கத்திலேயே ஒரு சில படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து முதல் மூன்று ஹிட்களை கொடுத்த ஒரே நடிகர் ஜெயம் ரவி என்ற பெருமையையும் பெற்றார் ஜெயம் ரவி.

அதிலிருந்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் ஜெயம் ரவி. ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக லவ்வர் பாயாக சார்மிங் ஹீரோவாக வலம் வந்த ஜெயம் ரவி ஏகப்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனத்தில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவிக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:எல்லா சைடும் விழுந்த அடி!.. உடனடியாக வெங்கல் ராவுக்காக வடிவேலு செய்த செயல்.. என்ன தெரியுமா?..

ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் ஒரு தயாரிப்பாளர். ஜெயம் ரவியை வைத்து சைரன், அடங்க மறு போன்ற படங்களை தயாரித்திருக்கிறார். சொல்லப்போனால் ஜெயம் ரவியை தேடி வரும் பல படங்களின் கதைகளை கூட சுஜாதா விஜயகுமார்தான் கேட்பாராம்.

இந்த நிலையில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.அந்த செய்திதான் இப்போது வைரலாகி வருகின்றது. இதில் மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு காரணமாக இருந்ததே குஷ்பூதான் என்று கூறினார் சபிதா ஜோசப்.

இதையும் படிங்க: அப்போ நடிச்சாரே கார்த்திக்… அதுக்கு அப்புறம் என்னாச்சு? இப்படி மிஸ் பண்ணிருக்காரே..!

அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் ரஜினியின் மகளை திருமணம் செய்யப் போவதாகவும் இருந்தாராம் ஜெயம் ரவி. ஆனால் ஜெயம் ரவி முதலில் பார்ப்பதற்கு சார்மிங்காக இருப்பதால் தன் மகளுக்கு திருமணம் செய்ய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்த்தியின் அம்மா ஜெயம் ரவியை வளைத்து போட்டு விட்டாராம். இப்படி சபிதா ஜோசப் கூறினார்.

Next Story