லியோ படத்துக்கு 4 மணி காட்சியா? ஒருவழியாக நீதிமன்றமும் தீர்ப்பு சொல்லியாச்சி..!

by Akhilan |
லியோ படத்துக்கு 4 மணி காட்சியா? ஒருவழியாக நீதிமன்றமும் தீர்ப்பு சொல்லியாச்சி..!
X

Leo Movie: தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் லியோ படத்திற்காக படக்குழு நீதிமன்ற படியேறி இருந்த நிலையில் அந்த மனு மீதான விசாரணையில் தற்போது தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இப்படம் ரிலீஸுக்கு நெருங்க நெருங்க மிகப்பெரிய பிரச்னைகளை எதிர்கொண்டது.

நா ரெடி பாட்டில் நடனம் ஆடிய கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என ஒரு பிரச்னை பரவியது. அதையடுத்து ஆடியோ ரிலீஸுக்கு இருந்த பெரிய எதிர்பார்ப்பை படக்குழு ரத்து என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து வைத்தது. 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக அப்டேட் என பேசப்பட்டது.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: ராதிகாவால் ரோட்டுக்கு வந்த கோபி… அதான் நெஞ்சு வலி ட்ராமாவோ?

ஆனால் முழுதாக 10 அப்டேட்டை கூட தயாரிப்பு நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை. பல பிரச்னைகளை தாண்டி ரிலீஸான லியோ படத்தின் ட்ரைலரும் சர்ச்சையை சந்தித்தது. விஜய் மாதிரி ஒரு மிகப்பெரிய பிரபலம் கெட்ட வார்த்தை பேசலாமா? அவரே இப்டி பேசினால் என்ன ஆகுமோ என பலரும் விமர்சித்தனர்.

இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டிகளில் அந்த காட்சியில் நடிக்க விஜய் தயங்கினார். நான் தான் காட்சியின் முக்கியத்துவத்துக்காக அப்படி பேச சொன்னேன் என மன்னிப்பும் கேட்டு வந்தார். இதையடுத்து படத்துக்கு தமிழக அரசு 5 காட்சிகள் போடலாம் என அனுமதி கொடுத்தது. இதையடுத்து கோர்ட் படியேறி லியோ படக்குழு 4 மணி காட்சிகள் வேண்டும்.

9 மணிக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் காட்சியை 7 மணிக்கு போட அனுமதி கேட்டு மனு போட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றம் இன்று நடத்துவதாக தள்ளி வைத்தது. இன்று நடந்த விசாரணையில், நீதிபதி 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது. 9 மணி காட்சியை மாற்றும் நேர பிரச்னைக்கும் தமிழக அரசே முடிவெடுத்து கொள்ளக்கூறி தீர்ப்பு வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: 10 படம் மட்டும் தான்… லோகேஷ் இந்த முடிவை எடுக்க இந்த பிரபலம் தான் காரணமா?!

இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்து விட்டனர். முடியுமானு முயற்சியாது பண்ணீங்களே என சிலர் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு ஆறுதலும் கூறி வருகின்றனர். இதை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு அரசு அதிகாரிகளுடன் தியேட்டர் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஒரு தகவலும் இணையத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story