ஜூஸை நம்பி மோசம் போன மன்சூர் அலிகான்! பீபீ ஊதிக்கிட்டுருந்தவருக்கு சங்கு ஊத நினைச்சிட்டாங்களே
Mansoor Alikhan: நேற்று பிரச்சாரம் செய்ய போன இடத்தில் திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் குறித்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தொடங்கி நடத்தி வரும் மன்சூர் அலிகான் தேர்தலை கருத்தில் கொண்டு தனது பலாப்பழம் சின்னத்திற்காக ஓட்டுக் கேட்டு பல்வேறு இடங்களுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்து பேச்சு மூச்சில்லாமல் இருக்க அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்சூர் அலிகான். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் குடியாத்தம் சந்தையில் இருந்து பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய மன்சூர் அலிகானுக்கு வலுக்கட்டாயமாக பழம் கலந்த ஜூஸ் கொடுக்கப்பட்டதாம்.
இதையும் படிங்க: தளபதி, நாயகன் படத்தை விட பெரிய சாதனை செய்த படம் எதுனு தெரியுமா? இது தெரியாம போச்சே
ஜூஸ் குடித்த சில மணி நேரத்திலேயே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் வந்ததாம். அதனால் ஜூஸில்தான் யாரோ தனக்கு விஷம் கலந்திருப்பதாக இப்போது மன்சூர் அலிகான் ஒரு அதிர்ச்சியான வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார்.
இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அவ்வப்போது சினிமாவிலும் தலைகாட்டி வரும் மன்சூர் அலிகான் சமீபத்தில்தான் விஜய் நடித்த லியோ படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படிங்க: இவ்வளவு நாள் எங்க போன செல்லம்!.. விதவிதமா காட்டி அசரவைக்கும் அஞ்சலி!.. இது செம போட்டோஸ்!..
விஜய் கட்சி ஆரம்பித்த சில நாள்களிலேயே விஜயை மறைமுகமாக தாக்கி தன்னுடைய கருத்தையும் பதிவிட்டிருந்தார். இதற்கிடையில்தான் புதியதாக கட்சி ஆரம்பித்து இப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.