சிவகார்த்திகேயன் - சூரி காம்போவில் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மாவீரன் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் ஒரு படத்தில் ஹீரோ எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கூட நடிக்கிற காமெடி நடிகரும் முக்கியம்.
நகைச்சுவை ஆதிக்கம்
அந்த காலத்தில் இருந்தே எம்ஜிஆர்,சிவாஜிக்கு பொருத்தமான காமெடி நடிகர் நாகேஷ் தான். அது போல 80களில் கமல், ரஜினிக்கு ஜனகராஜ், ஒய்ஜியும் சத்யராஜ் காலத்தில் கவுண்டமணி, செந்திலும் அஜித், விஜய்க்கு வடிவேல் விவேக்கும் இருந்த மாதிரி சிவகார்த்திகேயன் அறிமுகமான காலத்தில் இருந்து நடிகர் சூரி தான் அவருக்கு ஏற்ற நகைச்சுவை நடிகராக இருந்திருக்கிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா போன்ற படங்களில் தொடர்ந்து இவர்களின் நகைச்சுவை பட்டித்தொட்டியெல்லாம் பேசப்பட்டு வந்தது. இதில் ஒரு ஒற்றுமை என்னவெனில் இந்த மூன்று படங்களையும் இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
சிவகார்த்திகேயன் இல்லாமல் படம் வாய்ப்பே இல்லை
சொல்லப்போனால் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இயக்குனராகவே வலம் வந்தார். இவரின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது. இவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த முதல் படம் தோஸ்த்.
அதன் பின் வரிசையாக ஏகப்பட்ட ஹிட் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் பொன்ராமை பற்றி ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. என்னவெனில் ஏற்கெனவே இவர் இயக்கிய ரஜினிமுருகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.
யுனிவெர்ஸ் தாக்கம்
அதுவும் இயக்குனர் லோகேஷ் எப்படி ஒரு யுனிவெர்ஸ உருவாக்கினாரோ அதே மாதிரி பொன்ராம் யுனிவெர்ஸ் என்று ஒன்றை உருவாக்க ரஜினிமுருகன் இரண்டாம் பாகத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் போஸ் பாண்டி கதாபாத்திரத்தை இந்த படத்தில் சேர்க்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதற்காக ரஜினிமுருகன் இரண்டாம் பாகத்தில் 2 சிவகார்த்திகேயன், 2 சூரி, ராஜ்கிரண்,சத்யராஜ் என கதாபாத்திரங்களை நுழைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. சிவகார்த்திகேயன் இப்பொழுது மாஸ் ஹீரோவாக ஆக்ஷன் ஹீரோவாக அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்.
சூரியும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆக்ஷன் ஹீரோவாக உருவாகி கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் போது இரண்டு பேரும் பழைய நிலைமைக்கு வருவார்களா ? என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.