More
Categories: Cinema News latest news

‘லியோ’வில் ரோலக்ஸா? புதைந்திருந்த ரகசியத்தை கசியவிட்ட த்ரிஷா! அப்போ lcu கன்ஃபார்ம்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷின் படம் என்றால் அவரின் முந்தைய படங்களின் தொடர்ச்சி கண்டிப்பாக அடுத்தப் படத்திலும் இருக்கும் என்பது தான் அவரின் ஃபார்முலா. அதுதான் lcu என்றும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில் கைதி படத்தில் தொடங்கி விக்ரம் படத்தில் கைதியில் நடித்த சில கதாபாத்திரங்களை காட்டி விக்ரம் படத்தையும் தன்னுடைய lcu வில்  கொண்டு வந்தார். விக்ரம் படத்திற்கு பிறகு விஜயை வைத்து  லியோ படத்தை எடுக்கிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து இந்த லியோ படமும் lcuவில் அடங்குமா? என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க : எனக்கே ஸ்கெட்சா? பிச்சு பிச்சு! கலைஞரே கலாய்த்த இசையமைப்பாளர்!

ஆனால் அதை உறுதிபடுத்தும் விதமாக எந்த ஒரு புகைப்படமோ அல்லது தகவலோ இல்லாமல்  மிக ரகசியமாக லோகேஷ் பாதுகாத்து வந்தார். இந்த நிலையில் இணையத்தில் த்ரிஷாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

ஏற்கெனவே த்ரிஷா விடுமுறை பயணமாக வெளி நாடு சென்றிருப்பதால் அங்கு ஒரு கடையில் ஷாப்பிங் செய்வது மாதிரியான ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் த்ரிஷாவின் கையில் தேள் புகைப்படத்தை டாட்டூவாக குத்தியிருக்கிறார்.

tri1

இதை பார்த்த ரசிகர்கள் அந்த டாட்டூவை மட்டும் குறிப்பிட்டு கண்டிப்பாக லியோ திரைப்படம் கண்டிப்பாக  lcu தான் வருகிறது என்று கூறிவருகிறார்கள். ஏற்கெனவே விக்ரம் படத்தில் ரோலக்ஸாக வரும் சூர்யா தன்னுடைய கழுத்தில் அந்த தேள் புகைப்படத்தைத்தான் டாட்டூவாக குத்தியிருப்பார்.

அதே போல் லியோவிலும் த்ரிஷாவின் கையில் அந்த மாதிரியான டாட்டூவை பார்த்ததும் ஒரு வேளை ரோலக்ஸ் அனுப்பி வைத்த உளவாளிதான் த்ரிஷாவாக இருக்குமோ? விஜயை அழிக்க த்ரிஷாவை வைத்து தான் காய் நகர்த்துகிறாரோ ரோலக்ஸ் என ரசிகர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஒரு கதையை எழுதி வருகின்றனர். சொல்லமுடியாது. ஒரு வேளை லோகேஷ் இப்படி செய்யக் கூடிய நபர்தான்.

இதையும் படிங்க : சின்ன வயசிலேயே உதவி செய்து அப்பாவிடம் அடி வாங்கிய விஜயகாந்த்.. அப்போது அவர் எடுத்த தீர்க்கமான முடிவு!..

ஒரு சின்ன விஷயத்தை வைத்து தன் முந்தைய படங்களை லிங்க் செய்யும் லோகேஷ் இந்த டாட்டூவை வைத்தும் எதாவது ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பார். எப்படியும் இந்த குழப்பத்துக்கும் அக்டோபர் 19 ஆம் தேதி ஒரு விடை தெரியும். அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.

Published by
Rohini

Recent Posts