விகே ராமசாமி பற்றி எஸ்.ஜே. சூர்யா சொன்னது பொய்யா? ரத்தப்பந்தமே சொல்லிருச்சே

by Rohini |
ramasamy
X

ramasamy

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக தயாரிப்பாளராக என பன்முக திறமை கொண்ட ஒரு சிறந்த கலைஞராக திகழ்ந்தவர் பழம்பெரும் நடிகர் வி கே ராமசாமி. இவர் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் ஒரு நாடக சபாவில் சேர்ந்தார்.

இவர் முதன் முதலில் நாம் இருவர் என்ற படத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கேரக்டரில் நடித்திருந்தார். யாருக்குமே தன்னுடைய முதல் படமானது ஒரு ஹீரோவாகவோ அல்லது துணை நடிகராகவோ நடிக்கத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் விகே ராமசாமி முதல் படத்தில் நடிக்கும் போது 20 லிருந்து 25 வயது தான் இருக்கும். இப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கதாபாத்திரம்.

இதையும் படிங்க: ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய டாப் 25 திரைப்படங்கள்!.. மறக்க முடியாத ‘வைதேகி காத்திருந்தாள்’….

ஆனால் அந்தப் படத்தில் அடித்தளம் போட்டதனால் என்னவோ தொடர்ந்து அவர் நடித்த எல்லா படங்களிலும் முதியவர் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார் வி கே ராமசாமி. 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 50 வருடங்களுக்கும் மேலாக தன் வாழ்க்கை முழுவதும் வயதான நபராகவே நடித்திருக்கிறார். இவர் கடைசியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் பல படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். கமல்ஹாசன் எப்போதுமே சினிமாவில் அவருக்கு கிடைக்கும் சம்பளத்தை சினிமாவிற்காகவே தியாகம் செய்வேன் என கூறுவார். அதைப்போல வி கே ராமசாமியும் சினிமாவிலிருந்து கிடைக்கும் பணத்தை சினிமாவிற்காகவே செலவழித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து பல படங்களை தயாரிப்பாராம்.

அதனால் தான் சேமிப்பு என்பதே இல்லை என விகே ராமசாமியின் மகன் சமீபத்திய ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். நிறைய படங்களில் நடிப்பதனால் காசு வந்து கொண்டே இருக்கும் .அதை படங்களை தயாரிப்பதன் மூலம் செலவழித்துக் கொண்டே இருப்பார் என் அப்பா எனக் கூறியிருக்கிறார். மேலும் வி கே ராமசாமி குதிரை ரேஸில் ஆர்வம் கொண்டவராம் .அதிலும் பணத்தை செலவழிப்பார் என அவருடைய மகன் கூறினார் .

இதையும் படிங்க: Kanguva: சூர்யாவுக்கு சொந்தக்காரன் திருப்பூர் சுப்பிரமணியன்.. கங்குவா குறித்து ராதாரவி பளீச்

இந்த நிலையில் வி கே ராமசாமியின் மகன் ரகுநாத்திடம் தொகுப்பாளர் ஒரு கேள்வியை கேட்டார். அதாவது எஸ் ஜே சூர்யா ஒரு பேட்டியில் கூறும்போது சிவாஜி கணேசனுக்கு வி கே ராமசாமி சீனியர் என்பதால் வி கே ராமசாமியின் உடைகளை துவைத்து கொடுப்பதன் மூலம் அதனால் கிடைக்கும் பணத்தை வைத்து சிவாஜி கணேசன் நிறைய இங்கிலீஷ் படங்கள் பார்ப்பார் என பதிவு செய்திருந்தார்.அது உண்மையா என வி கே ராமசாமியின் மகனிடம் கேட்டார் .

அதற்கு அவருடைய மகன் ரகுநாத் ‘இப்படி ஒரு தகவலை என் அப்பா என்னிடம் சொன்னதே கிடையாது. அந்த சமயத்தில் இப்படி ஒரு செய்தி பத்திரிகைகளில் எழுதி இருக்கலாம். ஆனால் ஊர்ஜிதமாக சொல்ல முடியாது. அந்த மாதிரி நடந்திருந்தால் என் அப்பா கூறி இருப்பார் .ஆனால் எனக்கு இதைப் பற்றி சரியாக தெரியாது’என அவருடைய மகன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story