இன்னும் போனி ஆகாத டான்.! சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அவ்வளவுதானா?!
டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றி சிவகார்த்திகேயன் அடுத்து எந்த படத்தில் நடித்துள்ளார். அது எப்போது ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. சிவகார்த்திகேயன் அடுத்ததாக அட்லீயின் உதவி இயக்குனர் சிபிசக்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் "டான்" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் மார்ச் மாதம் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தில், அனிருத் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் எஸ் ஜே சூர்யா சிவாங்கி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இதே லைக்கா நிறுவனம் ராஜமௌலி இயக்கியுள்ள RRR திரை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளது. அந்த திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
தான் தயாரிக்கும் படமும் தான் ரிலீஸ் செய்யும் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவதால் டான் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அமைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
இதையும் படியுங்களேன்-யாரு ஓனர்-னு சொல்லிட்டு போங்கடா.! அட்லீக்கு நடந்த சோகம்.!
RRR பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம் இந்திய அளவில் அதற்கு எதிர்பார்ப்பு நிலை உள்ளது. அதனால், அந்தப் படத்தை குறித்த தேதியில் வெளியிடலாம் "டான்" படம் தமிழகத்தில் மட்டுமே அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது, அதுவும் RRR திரைப்படம் அளவிற்கு கிடையாது. எனவே டான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
அதனால், டான் தற்போது வரை தியேட்டர் விநியோகஸ்தர்களிடம் எந்தவித ஒப்பந்தமும் தற்போதுவரை லைகா நிறுவனம் மேற்கொள்ள வில்லையாம். அதனால், மார்ச் 25ஆம் தேதி கண்டிப்பாக டான் திரைப்படம் வெளியாகாது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.