போற போக்குல கடையை மூடிருவாங்க போல!.. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்‘ சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்?..

by Rohini |
pandian
X

pandian

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் ஆரம்பித்த முதல் டிஆர்பியில் ரேட்டிங்கில் முதல் இடத்தையே தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் அண்ணன் தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட இந்த சீரியல் மக்களிடம் நல்ல ரீச்சை பெற்று வருகிறது.

pandian1

pandian1

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், ஹேமா என பல பிரபலமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். ஏற்கெனவே இந்த சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரமான முல்லை கேரக்டரில் நடித்த காவ்யா சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதனிடையில் கதிர் கேரக்டரில் நடிக்கும் குமரன் இப்போது ஓடிடி சீரிஸில் பிஸியாக நடித்து வருவதால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவர் நீடிப்பது என்பது சந்தேகம் தான் என்று கூறிவருகிறார்கள். ஏற்கெனவே எஸ்.ஜே.சூர்யாவின் வெப் சீரிஸான ‘வதந்தி’ சீரிஸில் அவர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

pandian2

pandian2

அதனை அடுத்து அடுத்த சீரிஸான ‘மாய தோட்டா’ என்ற சீரிஸிலும் ‘z பிரிவு அதிகாரியாக’ நடிக்கிறார் குமரன். அதற்காக அவர் தன் உடம்பில் மிகவும் மெனக்கிட வேண்டியிருக்கிறதாம்.ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லுங்கியுடன் நடித்திருப்பார்.

இதையும் படிங்க : தொடர் நஷ்டம்!.. கடனுக்கு பயந்து சொந்த ஊருக்கு மூட்டை கட்டிய தனுஷ் குடும்பம்..

மேலும் மாய தோட்டா சீரிஸிற்காக அந்த அதிகாரி செய்யும் வேலைகள் பற்றியும் என்ன வேலைகள் செய்கிறார்கள் என்பதை பற்றியும் அறிய வேண்டியிருக்கிறதாம். அதற்கான வொர்க் அவுட்களையும் குமரன் செய்து வருகிறாராம். மொத்தம் ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸில் சைத்ரா ஷெட்டி, அமித் பார்கவ் போன்ற சீரியல் நடிகர்கள் நடித்து வருகின்றனர். குமரனின் இந்த டென்ஷனை பார்த்தால் கூடிய சீக்கிரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முழுக்கு போட்டுவிடுவார் என்று தெரிகிறது.

pandian3

kumaran

Next Story