சிவாஜி போட்ட சிவப்பு துப்பட்டாவுக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருக்கா? அடடா மனுஷன் பெரிய ஆளுய்யா!
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா படத்தின் 100 வது நாள் விளம்பரம் அன்றைய பிரபல நாளிதழில் போட்டு இருந்தார்கள். அடுத்த படமாக நீதி படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல் வந்தது. அப்போது ஓய்வு இல்லாமல் தொடர்ந்து நடித்து வந்தாராம் நடிகர் திலகம்.
அக்டோபர் 1ம் தேதி அவரது பிறந்தநாளன்று மைசூரில் நீதி படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். காங்கிரஸ் கட்சி கூட்டம், நடிகர் சங்க கூட்டம் என பல வேலைகளில் ஈடுபட்டதால் ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தார் சிவாஜி.
அப்போது அவருக்கு ரத்த வாந்தியே வந்து விட்டதாம். அதனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பயந்து போய் டாக்டரை அழைத்துள்ளனர். அவரும் பரிசோதித்த பின் பிபி சற்று அதிகமாக உள்ளது. ஓய்வெடுக்க வேண்டும் என்றாராம்.
ஆனால் மறுநாள் காலை செங்கற்பட்டு அருகே சூட்டிங். எனக்காக எல்லாரும் காத்துக் கொண்டு இருப்பார்கள். கால்ஷீட் வேஸ்டாகி விடும் என்று கிளம்பி விட்டாராம். அன்று தான் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் எங்களது பூமி பாடலுக்கான சூட்டிங் நடந்தது. அந்தப் பாடலில் ஒயிட் அண்ட் ஒயிட்டில் செம ஜோராக இருப்பார் சிவாஜி. தோளில் ஒரு சிகப்பு கலர் துப்பட்டாவைப் போட்டு இருந்தாராம்.
இதையும் படிங்க... கமலுக்கு கதையே பிடிக்கல! ஆனாலும் நடிச்சி ஹிட் கொடுத்தார்!.. இப்படி போட்டு உடைச்சிட்டாரே இயக்குனர்!
தன்னையும் மீறி ரத்த வாந்தி வந்தால் யாருக்கும் தெரியாதவாறு துடைத்து விடலாம் என்று தான் அந்த சிகப்பு துப்பட்டாவைத் தோளில் போட்டு இருந்தாராம் சிவாஜி. தன்னால் படப்பிடிப்புக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்றே இப்படி செய்தாராம் நடிகர் திலகம். அதனால் தான் அந்த உயர்ந்த உள்ளத்தைப் பற்றி இன்றும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.