டைரக்டர்களுக்கு வலைவிரிக்கும் அஜீத்... விஷ்ணுவர்த்தனுடன் மீண்டும் சேராததற்கு இதுதான் காரணமா?

Ajith
அல்டிமேட் ஸ்டார் படங்கள் என்றாலே அதற்கு என பெரும் கூட்டம் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் உண்டு. காரணம் தல அஜீத்தோட மாஸான நடிப்பு தான். இவர் சமீப காலமாக ஸ்டைல் லுக்குடன் பல படங்களில் நடித்து வருகிறார். 'சால்ட் அண்ட் பெப்பர் லுக்' என்ற ஸ்டைலே இவர் கொண்டு வந்ததாகத் தான் இருக்கும். மங்காத்தா படத்தைப் பார்த்தால் தெரியும். அந்த வகையில் தற்போது விடாமுயற்சி படத்தை இழு இழு என்று இழுத்தடித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க... சிவாஜிக்கு ‘நடிகர் திலகம்’ பட்டம் கொடுத்தது யாருன்னு தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கா?
பல வெளிநாடுகளில் போய் படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதே போல குட் பேட் அக்லியும் லிஸ்டில் இருக்கிறது. இந்த இரு படங்களில் எது முதலில் வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்சினிமா உலகில் தல அஜீத் இப்போது பல படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார். அதுபற்றி பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
அஜீத் தற்போது படங்கள் நடிக்க ரொம்ப ஆர்வமா இருக்காரு. அவரே வந்து இயக்குனர்களிடம் போன் பண்ணி 'ப்ரீயா இருக்கீங்களா? எப்ப வர்றேங்க..?'ன்னு கேட்குறாராம். சிறுத்தை சிவா, மோகன்ராஜா, எச்.வினோத் என எல்லாருக்கும போன் பண்ணி சேர்ந்து பண்ணலாம்னு சொன்னாராம்.
விஷ்ணுவர்த்தன், வெங்கட்பிரபு இவர்களுடன் அஜீத் மீண்டும் சேர்ந்து பணியாற்றாமல் இருப்பதற்கு ஈகோ பிராப்ளம் தான் காரணம். இவரு கூப்பிட்டப்போ அவர்கள் வராமல் போனதுதான் காரணம். அது எப்போ மாறும்னு தெரியல. ஆனா மாறாதுன்னும் சொல்ல முடியாது. விஷ்ணுவர்த்தனும் சரி. வெங்கட்பிரபுவும் சரி. இப்போதைக்கு அவங்க மேல ஏதோ ஒரு கோபத்துல இருக்காரு.
இதையும் படிங்க... கடைசி முயற்சியில் விடாமுயற்சி! இது மட்டும் வொர்க் அவுட் ஆகலனா படம் அரோகராதான்..
திரும்ப எப்போ சேருவாங்கங்கறதை காலம் தான் முடிவு பண்ணும். விடாமுயற்சி முடித்ததும் அடுத்ததா குட் பேட் அக்லி படத்தை ஜப்பான்ல தான் எடுக்கப் போறாங்களாம். விடாமுயற்சிக்கும் அஜீத் டேட் கொடுத்து விட்டாராம். அதனால அதை சரியாகப் படக்குழு பயன்படுத்தினால் தான் உண்டு. குட் பேட் அக்லி வெளியானதும் தான் விடாமுயற்சி வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.