Cinema News
பா.ரஞ்சித் செய்தது தவறா?.. ரஜினிக்கு இதெல்லாம் தெரியாதா?!.. பிரபலம் சொல்றத கேளுங்க!…
இயக்குனர் பா.ரஞ்சித்தை ரஜினி ரசிகர்கள் நன்றி கெட்டவர் என்று சொன்னது நியாயமா என்று பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி அலசுகிறார். வாங்க, பார்ப்போம்.
சமீபத்தில் ஒரு அரசியல் நிகழ்வுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் சென்றுள்ளார். அங்கு ஒருவர், ‘ரஜினியை வைத்து தலித் அரசியல் பண்ணிருக்கீங்க. காலா படத்துல காட்டுற மாதிரி ரஜினி சொந்த வாழ்க்கையில இல்லையே.. அப்ப கதை என்னன்னு கேட்காமதான் நடிச்சாரா?’.. என ஒரு கேள்வி கேட்க, இதற்கு இயக்குனர் பா.ரஞ்சித் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே அதைக் கடந்து விட்டுப் போய் விட்டார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித்தைப் பொறுத்தவரை அவரது முதல் படம் வித்தியாசமான தலித் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அதன்பிறகு அவரது 2வது படம் மெட்ராஸ். இந்தப் படத்தில் சென்னையின் அடித்தட்டு மக்களின் மன ஓட்டத்தை அழகாகக் காட்டியுள்ளார். இது ஒரு வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட படம். தலித் அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அவரது 3வது படம் ரஜினி நடித்த கபாலி. இது வசூல் ரீதியாக சாதனை படைத்தது. பா.ரஞ்சித்னா யாருன்னு எல்லோருக்கும் தெரிந்தது. இவர் நாலாவதாக எடுத்த படம் காலா. இது அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
அதே நேரம் சார்பட்டா பரம்பரையும், வரக்கூடிய தங்கலான் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவரது படம் எல்லாமே ஒரு சமூகம் சார்ந்த கதையாகத் தான் இருக்கிறது. ரஜினிகாந்த் விஷயத்தில் பா.ரஞ்சித் நன்றி கெட்டவர் என்றும் ரசிகர்கள் சொன்னார்களாம். ரஜினி தான் பா.ரஞ்சித்துக்கு கபாலி படத்தைக் கொடுத்து பெரிய அளவில் வெளியே தெரிய வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது
பா.ரஞ்சித்தும், ரஜினி மகள் சௌந்தர்யாவும் ஒன்றாகத் தான் ஊடகத்தில் வேலை பார்த்தார்களாம். அந்த வகையில் சௌந்தர்யா தான் பா.ரஞ்சித்துக்குக் கபாலி பட வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தாராம். ஆனால் சௌந்தர்யா சொன்னதற்காக மட்டுமே ரஜினி வாய்ப்பு கொடுத்து இருப்பாரா என்று யோசிக்க வேண்டும். ரஜினி 80களில் இயக்குனர் பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோரது படங்களில் நடித்துள்ளார். 90களுக்குப் பிறகு மசாலா படங்களில் தான் நடித்தார். அவர் மிஷ்கினோ, வெற்றிமாறனையோ அணுகவில்லை.
அப்படி என்றால் பா.ரஞ்சித்தை மட்டும் ஏன் தேர்வு செய்தார் என்றால், அந்த நேரத்தில் ரஜினிக்கு ஒரு லைம் லைட்டில் உள்ள புது இயக்குனர் தேவைப்பட்டதாம். அரசியல் சார்ந்தும் சிந்தித்து தான் இந்த முடிவை எடுத்தாராம். இது போன்ற படங்களில் நடித்தால் அரசியலில் அடித்தட்டு மக்களிடம் போய்ச் சேரும். ரஜினிக்கு இந்த தலித் அரசியல் தெரியாதா என்றால், கண்டிப்பாகத் தெரியும். அந்த வகையில் பார்த்தால் பா.ரஞ்சித் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் பா.ரஞ்சித் இப்போது கூட மறுப்பு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.