விஜய் வந்த சிகப்பு காருக்கு இன்சூரன்ஸ் முடிஞ்சிருச்சா.?! இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!
நேற்று தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கோலாகலமாக நடைபெற்றது. கமல், விஜய், சூர்யா, கார்த்தி என பல திரை பிரபலங்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். அதில் நடிகர் விஜய் காலையிலேயே முதல் ஆளாக வந்து தனது வாக்கினை செலுத்தினார்.
விஜய் மாருதி செலெரியோ (Maruti Celerio) வாகனத்தில் வந்திறங்கி வாக்கு செலுத்தினார். அதனை வைத்தே பல செய்திகள் வலம் வர தொடங்கிவிட்டன. அவர் சிகப்பு கலர் காரில் கருப்பு மாஸ்க் அணிந்து வந்து தனது வாக்கினை செலுத்தினார். சென்ற முறை சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தி பெட்ரோல் டீசல் விலை உயர்வை சுட்டி காட்டினார்.
இந்த முறை தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்ததன் காரணாமாக காரில் வந்து வாக்கு செலுத்தினார் என பலவாறு தங்கள் இஷ்ட்டபடி வதந்திகளை அள்ளி தெளித்தனர்.
இதையும் படியுங்களேன் - சூப்பர் ஸ்டார் 170 மாஸ் அப்டேட்.! பாட்டெழுதுனா சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும்.!
இந்நிலையில், அவர் வந்த காரின் நம்பர் (TN 07 CS 7967) இதனை இன்டர்நெட்டில் துழாவியுள்ளனர். அதில் இந்த காரின் ஓனர் பெயர் ஜோசப் விஜய் என அவரது பெயரில் தான் உள்ளது. ஆனால், அந்த காரின் இன்சூரன்ஸ் தேதி காலாவதி ஆகிவிட்டதாக பதிவிடப்பட்டிருந்ததாம்.
அதனை குறிப்பிட்டு, பல நெட்டிசன்கள் விஜயை வரிகட்டவில்லை என சிலாகித்து வருகின்றனர். உண்மையில், அந்த கார் இன்சூரன்ஸ் முடிந்துவிட்டதா அலல்து ஏதேனும் கிளப்பி விடுகிறார்களா என அந்த வண்டி நம்பரை உரிய தளத்தில் பதிவிட்டால் தெரிந்துவிட போகிறது.