More
Categories: Cinema News latest news

வீணா சிம்புவை சீண்டி பல கோடி போச்சி!.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்!..

சினிமாவில் எப்போதுமே தீர்க்கப்படாத பிரச்சனை ஒன்று உள்ளது. ஒரு தயாரிப்பாளர் ஒரு ஹீரோவிடம் கால்ஷீட் கேட்டு அவருக்கு அட்வான்ஸ் கொடுப்பார். பெரிய ஹீரோக்கள் எனில் சில கோடிகள் அட்வான்ஸாக கொடுக்கப்படும். ஆனால், அட்வான்ஸை வாங்கி பையில் போட்டுக்கொண்ட அந்த நடிகர் அந்த தயாரிப்பாளருக்கு வருடக்கணக்கில் படம் நடித்து கொடுக்காமல் இழுத்தடிப்பார்.

தயாரிப்பாளர் சங்கத்தாலும் இதற்கு தீர்வு காணமுடியாது. அந்த ஹீரோவிடம் கோரிக்கை வைக்க மட்டுமே முடியும். கூப்பிட்டு பேசினாலும் கையில் இரண்டு படங்கள் இருக்கிறது முடித்துவிட்டு இவர் படத்தில் நடிக்கிறேன் என அந்த ஹீரோ சொல்லுவார். அந்த அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி தரமாட்டார். கால்ஷீட்டும் கொடுக்க மாட்டார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: இரு நடிகைகளை அசால்ட் பண்ணிய சிம்பு!.. மாமா வேலை பாத்ததுதான் மிச்சம்.. புலம்பும் இயக்குனர்…

இதை சிம்பு, தனுஷ், விஷால் என பல ஹீரோக்களும் செய்து வருகிறார்கள். தயாரிப்பாளருக்கு வட்டி ஏறுவதை பற்றி கவலையே படமாட்டார்கள். இதில் சிம்பு முக்கியமானவர். தயாரிப்பாளர்களை கதறவிடும் நடிகர்களில் சிம்பு முக்கியமானவர். ஆனால், சினிமாவில் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என பாட்டு மட்டும் பாடுவார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு ரூ.4.5 கோடி அட்வான்ஸ் கொடுத்திருந்தார். அவருக்கு தொடர்ந்து 3 படங்கள் நடித்து கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். அவரின் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தில் மட்டுமே நடித்தார் சிம்பு. அதன்பின் சிம்புவிடம் அவரால் கால்ஷீட் வாங்க முடியவில்லை.

இதையும் படிங்க: கமல் வகுத்த வியூகம்! சிம்புவுக்காக ஆண்டவர் போட்ட பக்கா ப்ளான் – இது சூப்பரா இருக்கே

இது தொடர்பாக ஊடகங்கள் கேட்டதற்கு ‘இது எங்களுக்குள் இருக்கும் சின்ன பிரச்சனை.. பேசி தீர்த்து கொள்வோம்’ என ஐசரி கணேஷ் சொன்னார். ஆனால், திடீரென சில நாட்களுக்கு முன்பு சிம்பு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேநேரம் ரூ.1 கோடியை அட்வான்ஸாக கொடுத்ததற்கு மட்டுமே அவரிடம் ஆதாரம் இருந்தது. எனவே, அந்த ஒரு கோடியை சிம்பு நீதிமன்றத்தில் கட்டவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் கடுப்பான சிம்புவின் அப்பா டி.ஆர் ‘இனிமேல் நீதிமன்றத்திலேயே பார்த்து கொள்வோம்’ என முடிவெடுத்துவிட்டாராம். சிம்புவோ இதை சீர்யஸாகவே எடுத்துகொள்ளவில்லை. ஜாலியாக ஃபாரின் டூர் போய்விட்டார். ‘அப்பா பார்த்து கொள்வார்’ என்பதுதான் அவரின் கணக்கு.

இப்போது ஐசரி கணேசனுக்கு இனி சிம்புவிடம் கால்ஷீட் வாங்க முடியாது. மேலும், அவருக்கு ரூ.3.5 கோடி நஷ்டமும் ஏற்பட்டுவிட்டது. எனவே, என்ன செய்வது என யோசித்து வருகிறாராம்.

இதையும் படிங்க: தீவிர அஜித் ஃபேனா இருந்த சிம்பு அந்தர் பல்டி அடிக்க காரணம் இதுதான்!… அப்புறம்தான் எல்லாம் மாறிச்சி!…

Published by
சிவா

Recent Posts