கமல் வகுத்த வியூகம்! சிம்புவுக்காக ஆண்டவர் போட்ட பக்கா ப்ளான் - இது சூப்பரா இருக்கே
கோலிவுட்டில் சிம்புவின் படத்திற்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதுவும் அவர் மாநாடு படத்திற்கு பிறகு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டார். வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல போன்ற படங்கள் அவரின் நடிப்பை பிரதிபலித்தது.
இப்போது கமலுடன் இணைந்து அவரின் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு இரட்டை கதாபாத்திரமாம்.
இதையும் படிங்க : ‘நீ என்ன அவன் பொண்டாட்டியா?’னு கேட்டாரு… கொடுமையை அனுபவிச்சேன்!.. புலம்பும் சீரியல் நடிகை..
மேலும் சிம்புவின் கெரியரிலேயே இந்தப் படம்தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் திரைப்படமாம். மேலும் வழக்கமாக 35 கோடியில் இருந்து 40கோடி வரை சம்பளம் வாங்கும் சிம்பு இந்தப் படத்திற்காக தன் சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சிம்புவின் இந்த புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறாராம். இதன் மூலம் சிம்புவுடன் ஆறாவது முறையாக கூட்டணி அமைக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஏற்கெனவே விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு, பத்து தல, செக்கச் சிவந்த வானம் போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த ஐந்து படங்களிலும் உள்ள பாடல்கள் என்றைக்கும் இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்களாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் இப்போது மீண்டும் இந்த கூட்டணி அமைய இருக்கிறது.
இதையும் படிங்க : புடிச்சாலும் புளியங்கொப்பா புடிச்ச துருவ் விக்ரம்! கூடிய சீக்கிரமே அப்பாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகும் வாரிசு
அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் ஒரு விரும்பத்தக்க கூட்டணியாகவே இவர்கள் பார்க்கப்படுகிறார்கள். அதன் காரணமாகவே இந்தப் படத்திலும் ரகுமானை இணைத்திருக்கிறார் போல கமல் என்று கூறப்படுகிறது.