‘நீ என்ன அவன் பொண்டாட்டியா?’னு கேட்டாரு... கொடுமையை அனுபவிச்சேன்!.. புலம்பும் சீரியல் நடிகை..

by prabhanjani |
seirl actress
X

சந்திரலேகா, அத்திப்பூக்கள், வம்சம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் சந்தியா ஜகரலமுடி. இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து செய்துவிட்டதாகவும், அதன் பின்னர் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இவர் பல நாய்களை வாங்கி வீட்டில் வளர்த்து வருகிறார். இது தான் தனக்கு திருப்தியாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இனி திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. எனக்கேற்ற ஒரு நபரை நான் பார்க்கவில்லை. நான் இன்னொரு முறை திருமணம் செய்துகொண்டால் கூட, கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்.

இதையும் படிங்க- கணவர் இறந்ததை யாரிடமும் சொல்லவில்லை.. ஆமாம் நான் க்ளாமரா தான் பண்றேன்- உண்மையை உடைத்த சீரியல் நடிகை

ஏற்கனவே மக்கள் தொகை அதிகமாக உள்ளது. அதனால் நான் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன். பலர் என்னிடம் ஏன் மனிதர்களுக்கு பணம் கொடுத்து உதவலாமே? அதை விட்டுவிட்டு, நாய்களுக்கு செலவு செய்து பராமரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கின்றனர்.

ஒரு நபருக்கு நான் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், அடுத்த மாதம் மீண்டும் வந்து 50 ஆயிரம் ரூபாய் கேட்பார்கள். ஆனால் இந்த நாய்கள் என்னிடம் எதையுமே கேட்பதில்லை, எதிர்பார்ப்பதில்லை. திருமண வாழ்க்கையை பொருத்தவரை என் மனநிலைக்கேற்ற நபரை இத்தனை ஆண்டுகளில் நான் பார்க்கவில்லை.

என் முதல் திருமண வாழ்க்கை இரண்டே வருடங்களில் முடிந்துவிட்டது. ஒருமுறை திருமணமான புதிதில் நானும் என் முன்னாள் கணவரும், காரில் சென்றுகொண்டிருந்த போது, சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டது. நான் உடனே ஓடிப்போய் அடிப்பிட்டிருந்த குழந்தைக்கும், அவரின் தந்தைக்கும் உதவி செய்தேன்.

பிறகு திரும்பி பார்த்தால், நாங்கள் வந்த கார் அங்கு இல்லை. வெகு தூரம் தள்ளி இருந்தது. நான் நடந்து சென்று ஏன் இவ்வளவு தூரம் வந்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நீ என்ன அவன் பொண்டாட்டியா? அங்கு அத்தனை பேர் இருந்தபோது, நீ ஏன் ஓடி சென்று உதவினாய்? என்று கேட்டார். எங்களுக்குள் செட் ஆகவில்லை. அதனால் பிரிந்துவிட்டோம் என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- அது மட்டும் இல்லனா இந்நேரம் இறந்திருப்பேன்… உயிர் பிழைச்சதே அதியசம்.. கோர விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை உருக்கம்

Next Story