அயலான் படத்தில் வில்லியாக அந்த நடிகையா?.. அடேய் அது எங்க கனவு கன்னிடா!..

Published on: August 13, 2023
ayalan
---Advertisement---

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் திரைப்படம் அயலான். நேற்று இன்று நாளை என்கிற திரைப்படம் 2015ம் வருடம் வெளியானது. இப்படத்தை ஆர். ரவிக்குமார் என்கிற இளம் இயக்குனர் இயக்கியிருந்தார். இப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் ரவிக்குமாரை அழைத்து ‘எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க’ என சொல்ல அப்படி உருவான திரைப்படம்தான் அயலான்.

இதையும் படிங்க: ரஜினிக்கே போன் போட்டு வாழ்த்தினாரா விஜய்?.. ஜெயிலருக்கு வாழ்த்து சொன்ன அஜித்!.. என்னங்க நடக்குது!..

ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என படம் பிரம்மாண்டமாக துவங்கியது. ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன், பானுப்பிரியா என பலரும் இப்படத்தில் நடித்தனர். ஹாலிவுட் பட ஸ்டைலில் பூமிக்கு வரும் ஒரு ஏலியன் பற்றிய கதை இது. நிறைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தில் இருக்கும் என சொல்லப்பட்டது.

 

ஆனால், இப்படம் துவங்கி பல வருடங்கள் ஆகியும் இதுவரை முடிந்த பாடில்லை. அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் மட்டுமே. அந்த படத்தை விட்டுவிட்டு வெவ்வேறு படங்களில் நடித்ததால் அயலாம் கிடப்பில் போடப்பட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மட்டும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார்.

isha

இந்நிலையில், இப்படத்தில் இஷா கோபிகர் வில்லியாக நடித்துள்ளாராம். காதல் கவிதை, என் சுவாசக்காற்றே உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் இவர். எனவே, இவரை ரசிகர்கள் வில்லியாக எப்படி பார்ப்பார்கள் என்பது தெரியவில்லை.

ஒருவேளை படத்தில் இவருக்கான காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்குமா என்பது தெரியவில்லை. இப்படத்தை இந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெயிலர் பார்த்துட்டு கண் கலங்கிய கன்னட சூப்பர்ஸ்டார்!.. அந்த அளவுக்கு என்ன நடந்தது தெரியுமா?..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.