Connect with us

Cinema News

ரஜினிக்கே போன் போட்டு வாழ்த்தினாரா விஜய்?.. ஜெயிலருக்கு வாழ்த்து சொன்ன அஜித்!.. என்னங்க நடக்குது!..

நடிகர் விஜய் இயக்குநர் நெல்சனுக்கு மட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கே போன் போட்டு வாழ்த்தியிருக்க வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் வெளியாகி ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

இன்னொரு பக்கம் நடிகர் அஜித்தும் ஜெயிலர் படத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாகவும் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிலர் பார்த்துட்டு கண் கலங்கிய கன்னட சூப்பர்ஸ்டார்!.. அந்த அளவுக்கு என்ன நடந்தது தெரியுமா?..

200 கோடி வசூல்: 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 3 நாட்களிலேயே இந்த ஆண்டு வெளியான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களை பல ஏரியாக்களில் முந்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித்தின் துணிவு திரைப்படம் 200 கோடி வசூல் செய்த நிலையில், துணிவின் வாழ்நாள் வசூலையே ஜெயிலர் 3 நாட்களில் முறியடித்து விட்டது என்றும் விஜய்யின் வாரிசு படத்தின் 300 கோடி வசூலை சுதந்திர தின விடுமுறையுடன் பீட் செய்து விடும் ஜெயிலர் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: நயன்தாராவை என்னம்மா தூக்கி சுத்துறாரு ஷாருக்கான்!.. இருந்தாலும் அட்லீ இப்படி துரோகம் பண்ணக்கூடாது!..

ரஜினிக்கே போன் போட்டாரா விஜய்:

இயக்குநர் நெல்சனுக்கு ஜெயிலர் படத்தின் வசூல் நிலவரத்தை பார்த்து விட்டு மெசேஜில் நடிகர் விஜய் வாழ்த்தியதாக நெல்சன் பேட்டி அளித்த நிலையில், அவருக்கு போன் செய்தும் தளபதி விஜய் வாழ்த்தி உள்ளதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கே விஜய் போன் பண்ணி வாழ்த்து சொல்லியிருக்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.

ஜெயிலருக்கு வாழ்த்து சொன்ன அஜித்:

விடாமுயற்சி படத்திற்காக ரெடியாகி வரும் நடிகர் அஜித்தும் ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பை பார்த்து விட்டு மெய்சிலிர்த்துப் போய் தனது தரப்பு வாழ்த்துக்களையும் ஜெயிலர் படக்குழுவுக்கு தெரிவித்துள்ளார் என்றும் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

அஜித், விஜய் இருவருமே எந்தவொரு ஈகோவும் இல்லாமல், சூப்பர்ஸ்டார் படத்தை கொண்டாடி வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தேவையில்லாமல் சண்டைகளை போடுவதெல்லாம் தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கும் செயல் தான் என்கிறார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு ஹிட் கொடுக்கும் இயக்குநர்களை காக்கா பிடிக்கும் ராகவா லாரன்ஸ்!.. நெல்சனுக்கு விரித்த வலை!..

google news
Continue Reading

More in Cinema News

To Top