Cookwithcomali: பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஹிட்டடித்த குக் வித் கோமாளி தொடங்கி விட்டாலும் பலருக்கு கவலையாகவே இருக்கிறது. நிகழ்ச்சியின் ஹிட்டுக்கு முக்கிய காரணமாக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். தற்போது அவர் கலந்து கொள்ளும் டாப் குக்குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை சன் டிவி, விஜய் டிவியிடம் இருந்து காப்பி அடித்து விட்டதாகவே ஒரு பஞ்சாயத்து சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வருகிறது. அப்படி பார்த்தால் சன் டிவியில் வந்த சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை தான் சூப்பர் சிங்கர் என்ற பெயரிலும், தில்லானா தில்லானா நிகழ்ச்சியை ஜோடி நம்பர் ஒன் என்ற பெயரில் விஜய் டிவி ஒளிபரப்பு செய்தது.
இதையும் படிங்க: இளையராஜாவுடன் உடனே நடந்தது… அந்த பிரபலத்துக்காக மூன்று மாதம் காத்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான்!…
கடந்த வருடம் விஜய் டிவி நிர்வாகம் மீடியா மேசன்ஸ் தயாரிப்புக் குழுவை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கியது. குக் வித் கோமாளி மட்டும் நீங்கள் இயக்கினால் போதும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனால், அந்த கம்பெனியில் வேலை செய்த அனைவருக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உருவாகியது.
அந்த நேரத்தில் சன் டிவியில் ஒரு ஈவென்டிற்காக மீடியா மேசன்ஸ் இணைய அவர்களே தங்களுக்கு ரியாலிட்டி ஷோ பண்ணிக் கொடுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் விஜய் டிவியில் சில மனக்கசப்புகள் உருவாக நிர்வாகம் மொத்தமாக டிவியில் இருந்து வெளியேறியது. இந்த திடீர் வெளியேற்றும் காசுக்காக இல்லை. பாலிடிக்ஸ் பிரச்சனையை கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அந்த நடிகையை இன்ஸ்பிரேஷனா வச்சுதான் போட்டேன்! லேடி கெட்டப் ரகசியத்தை பகிர்ந்த கவின்
முதலில் வெங்கடேஷ் பட்டுடன் தாமுவும் வெளியேறுவதாக அறிவித்தார். ஆனால் ஒரு சில மணி நேரங்களில் அந்த பதிவை நீக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவி நிர்வாகம் தாமுடன் பேசி அவரை குக் வித் கோமாளியில் தக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சீசனில் விடிவி கணேஷிற்கு தான் மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருக்கிறதாம். சன் டிவி ஷோவில் ஒரு நாள் கெஸ்ட்டாக வரும் வடிவேலுவிற்கு 45 லட்ச ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம். வெங்கடேஷ் பட்டும் சம்பளத்திற்காக சன் டிவி நிகழ்ச்சிக்கு மாறவில்லை.
1999 ஆம் ஆண்டிலிருந்து மீடியா மேசன் டீம்முடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார். முதலில் ரொம்பவே கறாராக பேசும் வெங்கடேஷ் பட் கேமராவுக்கு பின்னால் ரொம்பவே கலகலப்பானவர் என கூறப்படுகிறது. இதை அறிந்து கொண்ட டீம் அவரை குக் வித் கோமாளியில் இறக்கி பிரபலமாக்கினர். தனக்கு ரொம்பவும் நெருக்கமான அந்த டீமை விட முடியாமல் தான் வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் இருந்து விலகினார் என்றே கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கமலுக்கு பிடிக்காத 3 வார்த்தை!. சொன்னா செம கடுப்பாயிடுவாரு!.. பிரபலம் சொன்ன தகவல்!..
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…