என் அப்பாவுக்கும் சான்ஸ் கொடுங்க..! தனுஷிற்கு அவர் மகன் வாங்கி தந்த வாய்ப்பு.. எந்த படம் தெரியுமா?

Published on: April 25, 2023
---Advertisement---

இயக்குனர் செல்வராகவன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அவரது தம்பி, நடிகர் தனுஷ். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் தனுஷ் அவ்வளவாக பிரபலமாகவில்லை அப்போது தனுஷை விட நடிகர் சிம்புதான் பிரபலமாக இருந்தார்.

தனுஷ் வந்த புதிதில் காதல் கொண்டேன் மாதிரியான படங்கள் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகின. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது.

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார். தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் யாவும் பிரபலமாக பேசப்படும் திரைப்படங்களாக இருக்கின்றன.

மகன் வாங்கி கொடுத்த வாய்ப்பு:

தனுஷ் நடித்த படங்களில் அவரது மகன் மூலமாக அவருக்கு வாய்ப்பு கிடைத்த படமும் உண்டு. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி திரைப்படத்தை தயாரித்தார் அதற்கு பிறகு ரஜினியை பார்ப்பதற்காக ஒருமுறை அவரது வீட்டிற்கு சென்றிருந்தார் தாணு.

அப்போது அங்கே தனுஷின் மகன் அமர்ந்திருந்தார். அவர் தாணுவை பார்த்து என் தாத்தாவுக்கு மட்டும் எப்போதும் வாய்ப்புகள் தருகிறீர்கள் என் அப்பாவுக்கும் வாய்ப்பு கொடுங்களேன் என கேட்டுள்ளார். என்ன இந்த பையன் திடீரென எப்படி கேட்கிறானே என அதிர்ச்சியடைந்துள்ளார் தாணு. பிறகு அதுக்கென்னப்பா… அவர் டேட் கொடுத்த படம் பண்ணிடலாம் என கூறியுள்ளார்.

அதன் பிறகு பேசும்போது தனுசும் கூட ஒரு முறை கலைப்புலி எஸ்.தாணுவிடம் வாய்ப்பு கேட்டார்.அதன் அடிப்படையில் உருவான திரைப்படம் தான் வேலையில்லா பட்டதாரி. தனுஷ் சினிமா வாழ்க்கையில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்களில் வேலையில்லா பட்டதாரி முக்கியமான படமாகும்.

இதையும் படிங்க: எனக்கு அவர யார்ன்னே தெரியாது- நேருக்கு நேராக போனி கபூரை வம்பிழுத்த மிஷ்கின்… ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்…

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.