50 ரூபாய் கொடுத்து ஸ்டூடியோவை விட்டே விரட்டிட்டாங்க!.. வாழ்க்கையை வெறுத்த ஜெய்பீம் மணிகண்டன்!..

Published on: May 29, 2023
---Advertisement---

இந்தியா பாகிஸ்தான் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானவர் மணிகண்டன். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது 2018 ல் வெளிவந்த காலா திரைப்படம்.

காலா படத்தில் ரஜினிகாந்திற்கு மகன் கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்தார். அந்த கதாபாத்திரம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை பெற்று கொடுத்தது மூலம் தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு பெற்றார் மணிகண்டன்.

அதற்குப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் 2021 இல் வெளிவந்த ஜெய் பீம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் இந்த படத்திற்குப் பிறகு பெரும் வரவேற்பு பெற்றார்.

இந்த படத்திற்கு பிறகுதான் அவரை ஜெய் பீம் மணிகண்டன் என அனைவரும் அழைக்க துவங்கினர். தற்சமயம் இவர் கதாநாயகனாக நடித்த குட் நைட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

மணிகண்டன் சந்தித்த பிரச்சனை:

தற்சமயம் ஒரு பேட்டியில் மணிகண்டன் பேசும்பொழுது சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு நடந்த அனுபவம் குறித்து பேசி இருந்தார். முதன்முதலாக மணிகண்டன் சினிமாவிற்கு டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவே அறிமுகமானார். படங்களுக்கு டப்பிங் செய்வதற்காகவே அவர் சினிமாவிற்கு வந்தார். அப்பொழுது ஒரு ஹிந்தி படத்தில் டப்பிங் பேசுவதற்கான வாய்ப்புகளை பெற்றார் மணிகண்டன்.

அந்த ஸ்டுடியோவிற்கு டப்பிங் பேச செல்லும் பொழுது அங்கே கூறிய ஒரு வார்த்தையை மணிகண்டனனால் சரியாக பேசவே முடியவில்லை. ஏனெனில் அவருக்கு டப்பிங் குறித்து முன் அனுபவம் எதுவும் இருக்கவில்லை. அந்த வசனத்தை மணிகண்டன் ஒழுங்காக பேசாத காரணத்தினால் அவரின் கையில் ஐம்பது ரூபாயை கொடுத்து இனி டப்பிங் ஸ்டுடியோ பக்கமே வந்து விடாதே! என அவரை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக டப்பிங் எப்படி செய்வது என்பது பற்றி மட்டும் கவனம் செலுத்தி வந்த மணிகண்டன் அதற்குப் பிறகுதான் திரும்பவும் டப்பிங் செய்ய வந்துள்ளார். அப்பொழுதுதான் டப்பிங் செய்வது எவ்வளவு கடினமான விஷயம் என்பதை அவர் அறிந்து கொண்டதாக தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ரெட்டத்தலயாக மாறும் சிம்பு.. மாஸான வரலாற்று சம்பவம் இருக்கு.. கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்!

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.