தமிழ் சினிமாவை கலக்கி வரும் ஸ்ரீதரன் மரியதாசன்... இன்று வெளியாகும் ஜெயில் பட டிரெய்லர் வீடியோ

by சிவா |   ( Updated:2021-10-27 03:54:21  )
jail
X

ஒவ்வொரு புதிய படமும் வெளியாகும் போது தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே பாலமாக செயல்படுபவர்கள் வினியோகஸ்தர்கள்தான். இந்த துறையில் தற்போது முக்கிய நபராக உருவெடுத்திருப்பவர் ஸ்ரீதரன் மரியதாஸன்.

இவர் பல திரைப்படங்களை வினியோகம் செய்துள்ளார். பல பன்முக திறமைகளையும் ஸ்ரீதரன் மரியதாஸன் பெற்றுள்ளார். குறிப்பாக, Krikes Cine Creations என்ற நிறுவனத்தின் மூலம் பல்வேறு ஆங்கில படங்களை தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் விநியோகம் செய்துள்ளார். மேலும், மிஸ்கின் நடிப்பில் வெளிவந்த ‘சவரக்கத்தி’ திரைப்படத்தையும் இவர்தான் வெளியிட்டார். குறிப்பாக, விஷால் தயாரித்து, நடித்து வெளியான ‘இரும்புத்திரை’படத்தை லைகா நிறுவனத்தோடு சேர்ந்து வெளியிட்டார்.

sridharan

இப்படத்திற்கு பின் அவர் தயாரிப்பாளராக மாறினார். வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து உருவான ‘ஜெயில்’ படத்தை அவர் தயாரித்துள்ளார். இப்படம் ஒரு சிறந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர், பாடல்கள், மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் ட்ரெய்லர் வீடியோவை வெளியிடுகிறார்.

jail

ஜெயில் படம் மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களை வைத்து மேலும் பல திரைப்படங்களை தயாரிக்க ஸ்ரீதரன் மரியதாஸன் திட்டமிட்டு வருகிறார். இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story