ஜெயிலர் 2வா பிச்சிப்புடுவேன் பிச்சி… எகிறிய ரஜினி!.. கூல் செய்ய வேறு ரூட் பிடித்த நெல்சன்…

by Akhilan |   ( Updated:2024-02-28 07:23:01  )
ஜெயிலர் 2வா பிச்சிப்புடுவேன் பிச்சி… எகிறிய ரஜினி!.. கூல் செய்ய வேறு ரூட் பிடித்த நெல்சன்…
X

Jailer2: நடிகர் ரஜினிகாந்தின் மாஸ் சூப்பர் ஹிட் திரைப்படமான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதில் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பதாக விஷயம் லீக்காகி இருக்கிறது. அண்ணாத்த படத்தின் மோசமான தோல்விக்கு பிறகு ரஜினிக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்த திரைப்படம் என்றால் அது ஜெயிலர் தான்.

இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது. படத்தின் பாடல்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் ஏகபோக சூப்பர் ஹிட் தொடர்ந்து அனிருத், நெல்சன், ரஜினிகாந்த் மூவருக்கும் விருப்பமான காரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பரிசாக கொடுத்ததே பரவலாக பேசப்பட்டது.

இதையும் படிங்க: சரத்குமார் – நக்மா காதலால் பாதிக்கப்பட்டவன் நான்! தயாரிப்பாளர் பட்ட வேதனை.. இப்படிலாம் நடந்துருக்கா

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர்171 படத்திலும் நடிக்க இருக்கிறார். விரைவில் அப்படத்தின் சூட்டிங் தொடங்க இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அது முதல் பாகத்தின் தொடர்ச்சி கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், நெல்சனுக்கு ஒரு கண்டிஷனை ரஜினிகாந்த் போட்டிருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

அதாவது ரஜினிகாந்துக்கு தொடர்ச்சி கதைகளில் நம்பிக்கை இல்லையாம். இதனால் ஜெய்லர் 2 படத்தின் பெயரில் புது கதையை நெல்சனை எழுத சொல்லி இருக்கிறார்களாம். பீஸ்ட் படத்தில் டாக்டர் படத்தின் சில கதாபாத்திரங்கள் இடம் பெற்றது போல ஜெயிலர் படத்தின் சில கதாபாத்திரங்கள் மட்டும் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறதாம்.

இதையும் படிங்க: முத்து விஷயத்தினை குடையும் ரோகினி!… அவரு திருப்பி உங்களை கிளறினா மாட்டிப்பீங்க… கம்முனு இரும்மா!

Next Story