Jailer 2: ‘ஜெயிலர் 2’வில் ரஜினியின் லுக் வேற லெவல்ல இருக்க போகுது... கொடுத்த அப்டேட் அப்படி

by Rohini |   ( Updated:2024-11-28 11:11:13  )
jailer
X

jailer

Jailer 2: சமீபகாலமாக ரஜினி நடித்து வரும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் பெரும் சாதனையை அடைந்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படமாக மாறியது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான இந்த படத்தில் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன் ,விநாயகன், யோகி பாபு என பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.

அவர்களுடன் கனடா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் என ஒரு பேன் இந்தியா திரைப்படமாக இந்த ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் வெளியாகி 600 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது. இந்த வெற்றியால் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் நெல்சன் இருக்க அதற்கு தயாரிப்பு தரப்பில் இருந்தும் கிரீன் சிக்னல் கிடைத்தது .

rajini

rajini

இதையும் படிங்க: சிறந்த நடிகர்கள் ரஜினி, கமல் எல்லாம் இல்லை… இவர்தான் பெஸ்ட்… ஆர். ஜே பாலாஜி சாய்ஸ்..

அதனால் நெல்சன் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டார். அதற்கான வேலைகள் தான் இப்போது நடந்து வருகிறது .ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு ஹூக்கும் என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்று ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது .இப்படி அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கும் ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தையும் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இதுலக்கூட நக்கலா?.. சொர்க்கவாசல் ரிலீஸ்!. வித்தியாசமாக புரமோஷன் செய்த ஆர்.ஜே பாலாஜி!..

இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்திற்கான ரஜினியின் லுக் டெஸ்ட் வேலைகள் தற்போது நடந்து வருவதாக தெரிகிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் ரஜினியை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அது மட்டுமல்ல அந்த புகைப்படத்தை ஆலிம் ஹக்கீம் அவருடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்து ‘ரஜினியுடன் வேலை புரிவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஜெயிலர்2 படத்தில் நாங்கள் உருவாக்கிய லுக்கை பார்க்க காத்திருங்கள்’ என பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவில் இருந்து ரஜினியை இன்னும் மாஸாக ஜெயிலர் 2 படத்தில் ஆலிம் ஹக்கீம் காட்டுவார் என தெரிகிறது.

Next Story