Connect with us

Cinema News

63 வயதில் 100 கிலோ எடையா? ஜிம்மில் மான்ஸ்டரான மோகன்லால்.. இதெல்லாம் வேறலெவல் வீடியோ!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் இந்த வயதிலும் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றி உள்ளார்.

மலையாளத்தில் கிட்டத்தட்ட 4க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் நடிகர் மோகன்லால் தமிழில் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 28ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நடிகர் மோகன்லால் அதில், கலந்து கொள்ளப் போவது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலரில் மோகன்லால்:

நடிகர் மோகன்லால் நடிப்பில் கடைசியில் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், அதன் பின்னர் அவர் நடித்த மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம், ப்ரோ டேடி, 12த் மேன், மான்ஸ்டர், அலோன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி படுதோல்வியை சந்தித்தன.

மேலும், 4 படங்களில் நடித்து வரும் மோகன்லால் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கன்னட நடிகர் சிவராஜ்குமார், டோலிவுட் நடிகர் சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் ஜெயிலர் பட்த்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

63 வயதிலும் செம ஃபிட்:

மலையாள நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இந்த வயதிலும் இளம் நடிகர்களை ஓரங்கட்டி விட்டு பாக்ஸ் ஆபிஸில் முன்னணி நடிகர்களாக வலம் வருவதை போலவே ஃபிட்னஸிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என நிரூபித்து வருகின்றனர்.

மலைக்கோட்டை வாலிபன் படத்தில் பீமசேனன் போல நடித்து வரும் மோகன்லால் அந்த படத்திற்காக தனது உடற்கட்டை மிகவும் வலுப்படுத்தி வருகிறார். ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் சற்று முன் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

100 கிலோ வெயிட்:

ஜிம்மில் 100 கிலோ வெயிட்டை அசால்ட்டாக pull பண்ணும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார் மோகன்லால். இந்த வயதிலும் எப்படி இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறாரே என இளம் நடிகர்களே பார்த்து வியக்கும் அளவுக்கு மோகன்லால் அதிபட்ச எடையை தூக்கிக் கொண்டு வொர்க்கவுட் செய்வது பல இளைஞர்களுக்கும் ஜிம்முக்கு செல்ல ஊக்கத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

 

View this post on Instagram

 

A post shared by Mohanlal (@mohanlal)

google news
Continue Reading

More in Cinema News

To Top