Cinema News
தப்பிச்சு எப்படியாவது ஓடிவிடு! ஜெய்லர் சக்சஸ் பார்ட்டியில் நெல்சனை கடுப்பாக்கிய ரஜினி!
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெய்லர் படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்று இருக்கும் நிலையில் வசூல் கிட்டதட்ட 550 கோடியை தாண்டி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஜெய்லர் படக்குழுவினை ரஜினி அப்செட்டாக்கிய சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்து இருக்கிறது.
அண்ணாத்த படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு பின்னர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருந்த படம் தான் ஜெய்லர். அதே நேரத்தில் விஜயின் பீஸ்ட் படமும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனால் நெல்சன் வேண்டாம் என பலதரப்பில் இருந்தும் கோரிக்கை வந்தது. ஆனால் கூட ரஜினிக்கு அவர் மீது நம்பிக்கை இருந்ததாம்.
இதையும் படிங்க : ரஜினியை பார்த்துகொள்ள போய் விஜயகாந்துக்கு வந்த சினிமா ஆசை!.. இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கா!..
இதனால் தான் ஜெய்லர் படத்தினை தொடர்ந்து நெல்சனே இயக்கினார். இதை ஜெய்லர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் கூட ரஜினி ஓபனாகவே சொல்லி இருந்தார். இத்தனை சர்ச்சைகளையும் தாண்டி நெல்சன் ஜெயித்து விட வேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருந்தது.
பாட்டுக்கே ப்ரோமோ வீடியோ போட்டு அந்த வீடியோவை ட்ரெண்ட்டாக்கும் வித்தை தெரிந்த நெல்சன் இந்தமுறை ரொம்பவே அடக்கி வாசித்தார். ஆனால் அவரே நினைக்காத அளவுக்கு காவாலா பாடல் மிகப்பெரிய ரீச்சை படத்துக்கு கொடுத்தது. தொடர்ச்சியாக வெளியான ஹுக்கும் பாடலும் சர்ச்சைக்கு மேலும் தீயை மூட்டும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க : ஆசை நிறைவேறினாலும் பாக்கக் கொடுத்து வைக்கல! மறைந்தும் மக்கள் மனதை வென்ற விவேக்
இத்தனை பிரச்னையை தாண்டி வெளியான ஜெய்லர் படம் மிகப்பெரிய வெற்றி படமாகி இருக்கிறது. இதனால் கண்டிப்பாக நெல்சனுக்கு கார் பரிசாக ரஜினி கொடுப்பார் என பலரும் நினைத்து இருந்தனர். சமீபகாலமாக வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர்களுக்கு நடிகர்கள் புது காரை பரிசளிப்பது வழக்கமாகி இருக்கிறது. விக்ரம் படத்தின் வெற்றியினை கமல் திருவிழா போல கொண்டாடினார்.
கறி விருந்து போட்டு கார், செயின் என பரிசால் படக்குழுவினை மெய்சிலிர்க்க வைத்தார். அந்த வகையில் ஜெய்லரின் சக்சஸ் மீட் சமீபத்தில் நெல்சன் தலைமையில் நடைபெற்றது. அதில் ரஜினியும் கலந்து கொண்டார். கண்டிப்பாக பரிசு கிடைக்கும் என வெயிட் செய்த படக்குழுவிடம் டாட்டா சொல்லிவிட்டு கப்சிப்பென இடத்தினை ரஜினி காலி செய்தாராம். இது படக்குழுவிற்கும் மட்டுமல்லாமல் நெல்சனுக்கு கூட ஏமாற்றமாக தான் இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.