Cinema News
பாக்ஸ் ஆபிஸ் கிங் நான்தான்!.. சைலைண்டா நிரூபித்த ரஜினி!… ஜெயிலர் 4 நாள் வசூல் இத்தனை கோடியா?!…
ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயமாக இருப்பது ஜெயிலர் படம்தான். ஏனெனில், பல பரபரப்பு மற்றும் வார்த்தை மோதல்களுக்கு பின் வெளியான படம் இது. பல வருடங்களாக சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் ரஜினியிடம்தான் இருக்கிறது.
ஆனால், சமீபகாலமாக அவரின் சில திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறாததாலும், ஒருபக்கம் விஜய் படங்கள் அதிக வசூலை பெறுவதாலும் விஜய்தான் சூப்பர்ஸ்ட்டார் என திரையுலகை சேர்ந்தவர்களே பேச துவங்கிவிட்டனர்.
இதையும் படிங்க: சன் டேவா சூப்பர்ஸ்டார் டேவா!.. பொன்னியின் செல்வன் 2 வாழ்நாள் வசூலுக்கு வேட்டு!..
இதற்கு விஜய் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். இது ரஜினிக்கு கோபத்தை ஏற்படுத்தவே ஜெயிலர் ஆடியோ விழாவில் பருந்து – காக்கா கதையை சொல்ல இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, சமூகவலைத்தளங்களில் ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதிக்கொண்டனர்.
இந்த சூழ்நிலையில்தான் ஜெயிலர் படம் வெளியானது. விஜய் ரசிகர்கள் ஜெயிலர் படத்திற்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பரப்ப, ஒருபக்கம் கலவையான விமர்சனத்தை ஜெயிலர் பெற்றது. ஆனாலும், இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினார். ஏனெனில், நெல்சனின் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் திரைக்கதையில் இருந்த சுவாரஸ்யம்தான்.
இதையும் படிங்க: அவசர புத்தியால் நிலைதடுமாறிய ரஜினி! ‘ராஜாதிராஜா’ படத்தில் ஏன் அந்தப் பாடல் இடம்பெறவில்லை தெரியுமா?
உலகம் முழுவதும் இந்த படத்திற்கு நல்ல முன்பதிவும் இருந்தது. படம் வெளியான பின்னரும் நல்ல வசூலை பெற்றது. முதல் நாளே இப்படம் ரூ.90 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அதன் பின்னரும் தொடர்ந்து இப்படம் நல்ல வசூலை பெற்றது.
இந்நிலையில் படம் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் தமிழகத்தில் ரூ.95 கோடியும், ஆந்திராவில் ரூ.32 கோடியும், கேரளாவில் ரூ.23 கோடியும், கர்நாடகாவில் ரூ.32.50 கோடியும், வட இந்தியாவில் ரூ.7 கோடியும், வெளிநாடுகளில் ரூ.132.70 கோடியும் என மொத்தம் ரூ.322.20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக மூவி ட்ராக்கர்கள் டிவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ரஜினிக்கு இணையான ஆளுனா அது இவங்கதான்! போற போக்குல அடுத்த சர்ச்சையை கிளப்பிய சரத்குமார்