லியோ தயாரிப்பாளருக்கும் தலைவலியை கொடுத்த கலாநிதி மாறன்!.. அனிருத்துக்கும் கார் கொடுத்து அசத்திட்டாரே!..
இந்திய சினிமாவிலேயே சன் பிக்சர்ஸ் படக்குழுவை கவனித்தது போல வேறு எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் இதுவரை கவனித்து இருக்குமா என்பது சந்தேகம் தான். 2000 கோடி வசூல் செய்த தங்கல், 1800 கோடி வசூல் செய்த பாகுபலி 2 படங்களுக்கு கூட இப்படி கொடுத்தது போல தெரியலையே என ஒட்டுமொத்த திரையுலகும் கலாநிதி மாறனை பார்த்து காண்டாகி விட்டதாக கூறுகின்றனர்.
ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூல் சாதனையை பெற்ற நிலையில், 200 கோடி பட்ஜெட்டில் உருவான படத்திற்கு 3 மடங்கு அதிக லாபம் கிடைத்த சந்தோஷத்தில் கலாநிதி மாறன் உள்ளார். ஜெயிலர் படத்தின் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முதலில் லாபத்தில் இருந்து ஷேர் செக் கொடுத்த கலாநிதி மாறன் கூடவே பிஎம்டபிள்யூ கார் பரிசாக அளித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இதையும் படிங்க: டைகர் கா ஹுகும்!.. சூப்பர்ஸ்டார் மாதிரியே ட்ரை பண்றாரா லிட்டில் சூப்பர்ஸ்டார்!.. தீயாய் பரவும் போட்டோஸ்!..
ரஜினிக்கு மட்டும் தான் கார் கொடுப்பீங்களா இயக்குனர் நெல்சன் க்கு ஒன்றும் இல்லையா என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்த நிலையில் ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் செக் மற்றும் காரை பரிசாக வழங்கினார். படத்திற்கு பக்கபலமாக இருந்தது ராக்ஸ்டார் அனிருத் தான், அவருக்கு மட்டும் இல்லையா என மீண்டும் விஜய் ரசிகர்கள் வம்பு இழுத்து வந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் செக் மற்றும் போர்ஷ் காரை பரிசாக வழங்கியுள்ளார் கலாநிதி மாறன்.
மூன்று சொகுசு கார்களை நிறுத்தி அனிருத்துக்கு எந்த கார் வேண்டுமோ அதை செலக்ட் செய்து கொள்ள கலாநிதி மாறன் சொல்ல நீல நிற ஸ்போர்ட்ஸ் காரை அனிருத் செலக்ட் செய்துள்ள வீடியோவை தற்போது சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு பலரது தூக்கத்தை கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: லியோ படத்துக்கு இத்தனை தீம் மியூசிக்கா!.. அடுத்த பாட்டு ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு!..
அனிருத் அடுத்து நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கும் இசையமைத்து உள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரும் அனிருத்துக்கு பல கோடி மதிப்பில் ஒரு சொகுசு காரை பரிசாக வழங்குவாரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படம் மற்றும் லைகா தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர். அந்தப் படங்களும் வசூலில் பெரிய வெற்றி பெற்றால் இந்த வருடம் அனிருத்துக்கு மொத்தம் நான்கு சொகுசு கார்களை வழங்க வேண்டும் என இப்போதே ரசிகர்கள் லிஸ்ட் போட்டு வருகின்றனர்.
ஜெயிலர் படத்திலேயே அடுத்து தமன்னா மற்றும் விநாயகனுக்கும் கார் கொடுக்க வேண்டும் என இன்னமும் விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்த பிட்டுகளை போட்டு வருகின்றனர் என்பது தனிக்கதை.
To celebrate the humongous Blockbuster #Jailer, Mr. Kalanithi Maran presented the key of a brand new Porsche car to @anirudhofficial#JailerSuccessCelebrations pic.twitter.com/lbkiRrqv7B
— Sun Pictures (@sunpictures) September 4, 2023