இவ்ளோ பெரிய வெற்றிக்கு ‘ஜெய்லர்’ லாயிக்கே இல்லாத படம்! ரஜினியின் மேல் இவ்ளோ வெறுப்பு ஏன்?
ஜெயிலர் திரைப்படம் இரண்டு வாரங்களை தாண்டி திரையரங்குகளில் இன்னும் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். படம் கிட்டத்தட்ட 500 கோடியை எட்டி விடும் என்றுதான் சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் ரஜினியின் கரியரில் இந்த படம் மிகப்பெரிய சாதனையை படைத்த படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த நிலையில் ரஜினி இமயமலை சென்றபோது வரும் வழியில் யோகியை சந்தித்து அவர் காலில் விழுந்து வணங்கியது பெரும் சர்ச்சைக்குரிய பொருளாகவே பார்க்கப்பட்டது. இந்த செயலை வலைப்பேச்சு பிஸ்மி மிகக் கடுமையாக எச்சரித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : ஊருக்கு மட்டும் தான் உபதேசமா.. ஜெயிலர்ல ரஜினி பண்ணது ரொம்ப தப்பு- கட் அண்ட் ரைட்டா சொன்ன தயாரிப்பாளர்..
அதாவது ஜெய்லர் திரைப்படம் ரிலீசுக்கு முன்பாக இந்த மாதிரி காலில் விழுந்து இருந்தால் கண்டிப்பாக இந்த படம் ஓடி இருக்காது என கூறி இருக்கிறார். இதற்கு முன்பு வெளியான அண்ணாத்த, தர்பார் போன்ற படங்களில் நடிக்கும் போது ரஜினியின் அரசியல் வருகை குறித்து எல்லோருக்கும் ஒரு பயம் கலந்த தயக்கம் இருந்தது.
அதன் காரணமாகவே அந்த படங்கள் தோல்வியை சந்தித்தன. ஆனால் அதன் பிறகு நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த பிறகு வெளியான படம் தான் ஜெயிலர். அதுகூட வெற்றிக்கு காரணமாக இருக்கலாம் என பிஸ்மி கூறினார்.
ஆனால் இவ்வளவு பெரிய வெற்றிக்கு இந்த ஜெய்லர் திரைப்படம் அந்த அளவுக்கு ஒர்த்தே இல்லை என்றும் கூறி இருக்கிறார். ஏனெனில் விக்ரம் பட கதையை தழுவி எடுத்த படமாகவும் இருப்பதால் திரைக்கதையில் அந்த அளவுக்கு சுவாரஸ்யம் இல்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆரால் பிரபலமாகி அவருடனே நடிக்க மறுத்த நடிகைகள்!.. அட இத்தனை பேரா?!..
மேலும் ஒரு டாப் ஹீரோவாக இருக்கும் ஒருவரின் படங்கள் எப்படிப்பட்ட மசாலா கலந்த படங்களாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படத்தில் ரஜினி மிகவும் பலவீனம் அற்றவராகவே காணப்படுகிறார். வில்லனை அடிப்பதற்கு அறிவாளை எடுத்துவரச் சொல்லி ஒரு ஆளையும் துப்பாக்கியை எடுத்துவரச் சொல்லி ஒரு ஆளையும் குண்டுகளை வேறொரு ஆளையும் வைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் ரஜினி.
இப்படி ரஜினியை பற்றியும் ஜெயிலர் படத்தை பற்றியும் பிஸ்மி அந்த பேட்டியில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஏற்கனவே ரசிகர்கள் பிஸ்மிக்கும் ரஜினிக்கும் அப்படி என்னதான் பிரச்சனை? எதற்கெடுத்தாலும் ரஜினியை விமர்சிப்பதையே தொழிலாக வைத்திருக்கிறாரே பிஸ்மி என இணையத்தில் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.