எம்.ஜி.ஆரால் பிரபலமாகி அவருடனே நடிக்க மறுத்த நடிகைகள்!.. அட இத்தனை பேரா?!..

ஏழு வயதிலேயே நாடகங்களில் நடிக்க துவங்கியவர் எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் நடித்தார். 37வது வயதில் சினிமாவில் நுழைந்தார். சினிமாவிலும் பல வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில்தான் நடித்தார். இது பலருக்கும் தெரியாது. சினிமாவில் நுழைந்து 10 வருடங்களுக்கு பின்னர்தான் அவர் ஹீரோவாகவே மாறினார்.

துணை நடிகராக நடித்த போது அவர் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது ஹீரோவாக நடித்தவர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை ஏளனமாக நடத்தியுள்ளனர். அதேபோல், கதாநாயகிகளும் எம்.ஜி.ஆரை அசிங்கப்படுத்தியுள்ளனர். எம்.ஜி.ஆர் முதன் முதலாக ஹீரோவாக நடித்த படம் சாயா. இந்த படத்தில் டிவி குமுதினி என்பவர் கதாநாயகியாக நடித்தார். அவருக்கு எம்.ஜி.ஆரை பிடிக்கவில்லை.

இதையும் படிங்க: சினிமாவில் தொடர ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்… இரண்டே படத்தால் அவர் ஆசையை உடைத்த பிரபல இயக்குநர்..

எனவே, காதல் காட்சிகளில் அப்படி நடிக்க மாட்டேன்.. இப்படி நடிக்க மட்டேன் என தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளார். ஒரு காட்சியில் அவரின் மடியில் எம்.ஜி.ஆர் படுத்துக்கொண்டு பேசுவது போல் காட்சி. ஆனால், அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. அவரின் கணவரும் ‘ஒரு துணை நடிகர் என் மனைவியின் மடியில் படுப்பதா?’ என சொல்லி அவரை அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார். அவமானத்தை சந்திதார் எம்.ஜி.ஆர்

அதேபோல், எம்.ஜி.ஆர் சொந்த காசை போட்டு, வீட்டை அடமானம் வைத்து, கடன் வாங்கி எடுத்த படம் நாடோடி மன்னன். இப்படத்தில் நடித்த பானுமதி படம் பாதி முடிந்த நிலையில் இனிமேல் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆர் பலரை வைத்து பேசியும் அவர் சம்மதிக்கவில்லை. அப்படித்தான் சரோஜா தேவியை அப்படத்தில் அறிமுகம் செய்தார் எம்.ஜி.ஆர். படமோ சூப்பர் ஹிட்.

அதன்பின் எம்.ஜி.ஆரிடன் தொடர்பு பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் சரோஜா தேவி. ஆனால், வேட்டைக்காரன் படம் உருவான போது அப்படத்தில் சரோஜா தேவியை நடிக்குமாறு எம்.ஜி.ஆர் கேட்டார். ஆனால், நான் பிஸியாக இருக்கிறேன். என்னிடம் கால்ஷுட் இல்லை என மறுத்தார் சரோஜாதேவி. அதன்பின் அப்படத்தில் சாவித்ரியை நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கலைஞர்!.. அப்புறம் நடந்ததுதான் மேஜிக்!…

அதேபோல், எம்.ஜி.ஆருடன் அரசிளங்குமாரி, ராணி சம்யுக்தா, விக்ரமாதித்யன், மன்னாதி மன்னன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் பத்மினி. ஆனால், தாய்க்கு பின் தாரம் படம் உருவான போது அப்படத்தில் நடிக்க மறுத்தார் பத்மினி. அப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடந்ததால் என்னால் அங்கு வந்து நடிக்க முடியாது என சொல்லிவிட்டார். அதேபோல். எம்.ஜி.ஆருடன் நடித்து பிரபலமான நடிகை ஜெயலலிதாவும் ஒரு கட்டத்தில் அவர் மீது இருந்த கோபத்தில் சிவாஜி, ஜெய் சங்கர், முத்துராமன் ஆகியோரோடு இணைந்து நடிக்க துவங்கினார்.

இப்படி எம்.ஜி.ஆரால் வளர்ந்த நடிகைகள் அவருடனேயே நடிக்க மாட்டேன் என சொன்னதுதான் சினிமாவின் வரலாறு. இதையெல்லாம் தாண்டித்தான் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து பெரிய ஆளுமையாக மாறி மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரஜினி படமாக மாறிய எம்.ஜி.ஆர் படம்!. பரபரப்பு திருப்பம்!.. நடந்தது இதுதான்…

Related Articles
Next Story
Share it