Connect with us
rajini

Cinema News

சொல்றதையும் செய்வேன்! சொல்லாததையும் செய்வேன் – ஹுக்கும்! கண்டம் தாண்டி மாஸ் காட்டிய ரஜினி

கோலிவுட்டில் இப்போது ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ரஜினியின் ஜெய்லர் திரைப்படம்தான். எந்த படத்திற்கும் இல்லாத ஒரு பெரிய வரவேற்பு இந்த ஜெய்லர் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் முழு ஈடுபாட்டுடன் படத்தை எடுத்திருக்கிறார் நெல்சன்.

அதே போல் தர்பார், அண்ணாத்த போன்ற படங்களின் தோல்விக்கு பிறகு ரஜினிக்கும் இது ஒரு சவாலான திரைப்படமாக அமையப்போகிறது. அதையும் தாண்டி ரஜினி மல்டி ஸ்டார்களுடன் இணைந்திருக்கும் படமாக இருப்பதால் கூட கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இதையும் படிங்க : ரஜினி-கமலை ரீ கிரியேட் பண்ணி எடுத்தப் படம்தான் அது! 15 வருட சீக்ரெட்டை போட்டுடைத்த நடிகர்

வருகிற 10 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் ஜெய்லர் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் இன்று இரவிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. ஆனால் வெளி நாடுகளில் ஜெய்லர் படத்தின் பிரிமீயர் ஷோக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது.

அதுவும் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 200 திரையரங்குகளில் 400 காட்சிகளுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. இந்திய மதிப்பில் சுமார் 3கோடி வரைக்கும் டிக்கெட் விற்பனையாகிவிட்டதாம். பேட்ட படத்திற்கு பிறகு ஜெய்லர் படத்திற்குத்தான் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறதாம்.

இதையும் படிங்க : கவுதம் மேனனின் புதிய படத்தில் ஹீரோ அவரா?… ஒரே மாமன்னனுக்கே இவ்வளவு அக்கப்போரு!..

தர்பார், அண்ணாத்த போன்ற படங்களுக்கு எல்லாம் இந்த அளவு வரவேற்பு இல்லவே இல்லையாம். எல்லாவற்றையும் தாண்டி ஜெய்லர் திரைப்படம் இந்தளவு பேசப்படுகிறது என்றால் காரணம் டிரெய்லர்தான். சுட்டெரிக்கும் கண்களுடனும் யார் வந்தாலும் அடிச்சு தூள் கிளப்பி விடுவேன் என்ற கோபத்துடன் முழு ஆக்‌ஷன் நிறைந்த  காட்சிகளால் டிரெய்லரிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.

அதிலும் ஒரு வெளிநாடு வாழ் இந்திய ரசிகர் கிட்டத்தட்ட 50க்கும் மேலான டிக்கெட்களை ஒரே நேரத்தில் முன்பதிவு செய்து மகிழ்ச்சியில் அதை தன் கழுத்தில் மாலையாக அணிவித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. கண்டம் கடந்து கடல் கடந்து வெளி நாடுகளில் மாஸ் காட்டி வரும் ரஜினியால் கோடம்பாக்கமே வியப்பில் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top