Connect with us
jailer

Cinema News

ரஜினி செஞ்ச வேலை!.. மொத்தமும் குளோஸ்!. பாக்ஸ் ஆபிசிலிருந்து வெளியேறிய ஜெயிலர்!..

அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் ரஜினி நடித்து கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சனுடன் ரஜினி கூட்டணி அமைத்ததாலும், இப்படத்தில் பாடல் வீடியோக்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததாலும் இப்படம் எதிர்பார்க்காத வகையில் வசூலை அள்ளியது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் கூட இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் இப்படத்தில் மோகன்லால், சிவ்ராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். முதல் வாரத்தில் இப்படம் ரூ.375 கோடி வரை வசூல் செய்ததாக அப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதையும் படிங்க: ஜெயிலர் ஃபார்முலாவை பின்பற்றும் ரஜினி.. தலைவர் 170 படத்தின் கதை இதுதான்..

அதன்பின் 9வது நாளில் இப்படம் விக்ரம் பட வசூல் ரூ.400 கோடி தாண்டியதாகவும், 12ம் நாளில் பொன்னியின் செல்வன் வசூல் செய்த ரூ.500 கோடியை தாண்டியதாகவும் சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர். மேலும், திரையுலகை சேர்ந்த சில வினியோகஸ்தர்கள் மற்றும் செய்தியாளர்களும் யுடியூப் சேனல்களில் இதையே கூறினர்.

அப்போதுதான் ரஜினி உ.பி. முதல்வரின் காலில் விழுந்த வீடியோ வெளியாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டார், அதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்திற்கான வசூல் குறைய துவங்கியது. அந்த சம்பவத்திற்கு முன்பதிவும் குறைந்து போனது. எனவே, டிக்கெட்டுகள் விற்காமல் தியேட்டரிகள் ஈ ஆடியது. பல திரையரங்குகளி பாதி இருக்கைகள் காலியாக கிடக்கிறது.

இதையும் படிங்க: ஊருக்கு மட்டும் தான் உபதேசமா.. ஜெயிலர்ல ரஜினி பண்ணது ரொம்ப தப்பு- கட் அண்ட் ரைட்டா சொன்ன தயாரிப்பாளர்..

எனவே, 20 கோடி, 10 கோடி, 5 கோடி என குறைந்து நேற்று உலகம் முழுவதும் சேர்த்தே இப்படம் ரூ.3 கோடி மட்டுமே வசூல் ஆகியிருந்தது. முதல் வாரத்தில் ரூ.375 கோடி வசூல் செய்த ஜெயிலர், இரண்டாவது வாரத்தில் வெறும் ரூ.175 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

மொத்தத்தில் ரூ.550 கோடி வரை வசூல் செய்துள்ள ஜெயிலர் 14வது நாளில் பாக்ஸ் ஆபிஸிலிருந்து வெளியேறிவிட்டது. இந்த வாரம் புதுப்படங்கள் வெளியாகும் நிலையில் ஜெயிலர் தனது வசூல் சாதனையை முடித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் தாறுமாறா கலெக்‌ஷனை அள்ளும் ஜெயிலர்!.. அட காரணம் இதுதானாம்!…

google news
Continue Reading

More in Cinema News

To Top