ஜெய்லர் போட்ட அதே ரூட்டை பிடித்த லியோ… அப்போ வசூல் ஜெட் வேகம் தானோ?

Tamil Cinema: தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்த மாஸ் ஹிட் படம் என்றால் அது ஜெய்லர் தான். பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ரஜினிக்கு சில ஆண்டுகள் கழித்து கிடைத்த சூப்பர் விமர்சனங்களும் அவருக்கு ஒரு எனர்ஜியை கொடுத்து இருக்கிறது.

ஜெய்லர் படம் வெற்றி பெற பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணம் இந்த இடைவேளையில் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. சின்ன சின்ன சில படங்கள் வந்தாலும் அந்த படங்களும் நல்ல கதையாக அமையவில்லை. டாடா, குட் நைட், லவ் டுடே போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் எல்லா நல்ல வெற்றியை பெற்றது. இந்த படங்களை போன்ற நல்ல கதையில் எந்த படங்களும் ஆகஸ்ட் மாதத்தில் ஜெய்லருக்கு போட்டியாக வெளியாகவே இல்லை.

இதையும் படிங்க: அவர ஓகே பண்ணாங்க… நான் மட்டும் இளிச்சவாயனா? இயக்குனரிடம் மல்லுக்கு நின்ற ரஜினி! ஓட்டம் பிடித்த இயக்குனர்!

இதேப்போல, லியோ படத்தின் ரிலீஸ் அக்டோபர் 19ந் தேதி நடக்க இருக்கிறது. அந்த படத்தின் ரிலீஸால் கிடைக்கும் வசூலும் கிடைக்காது என்பதால் செப்டம்பர் மாதம் மட்டுமே 30 படங்கள் வெளியாக இருக்கிறது. இதில் சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும் இல்லாமல் சில பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாக இருக்கிறது.

விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி செப்டம்பர் 15ந் தேதி வெளியாக இருக்கிறது. பல நாளாக பெட்டியில் இருந்த விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் 18ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக ஜெயம் ரவியின் நடிப்பில் இறைவன் படம் செப்டம்பர் 25ந் வெளியாகிறது. இதே நாளில் பாம்பாட்டம் படமும் ரிலீஸ் ஆகிறது.

இதையும் படிங்க: மாரிமுத்து இறந்த அன்று மகன் சொன்ன விஷயம்! நாமெல்லாம் ஒன்னுமில்ல – வேதனையுடன் பேசிய நடிகர்

ரத்தம், இடிமுழக்கம், மகாராஜா, புல்லட், ஜாக்சன் துரை 2, பிரபாஸின் சலார் படங்களும் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது. மாஸ் ஹிட் படமான டிமாண்டி காலனி இரண்டாம் பாகம், ஜிவி பிரகாஷின் காதலிக்க யாருமில்லை, சசிகுமாரின் நனா நனா ஆகிய படங்களும் வெளியாக இருக்கிறது.

இந்த மாதத்திலேயே ரஜினியின் மாஸ் ஹிட் படமான சந்திரமுகியின் இரண்டாம் பாகம். ராகவா லாரன்ஸ், கங்கணா ரணாவத் இணைந்து நடித்திருக்கும் இப்படமும் செப்டம்பர் 28ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனால் இம்மாதம் வசூல் பலமாக அடிப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். இதனால் ஆயுதபூஜைக்கு வெளிவரும் லியோ படத்தின் வசூல் பாதுகாப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story