வக்கிரத்தின் உச்சம் தான் ஜெய்லர் படம்… இப்படியா காட்சிகள் வைப்பீங்க? திட்டி தீர்க்கும் விமர்சகர்!

by Akhilan |
வக்கிரத்தின் உச்சம் தான் ஜெய்லர் படம்… இப்படியா காட்சிகள் வைப்பீங்க? திட்டி தீர்க்கும் விமர்சகர்!
X

தமிழ் சினிமாவில் சமீபத்திய காலத்தில் வெளியான எல்லா வெற்றி படங்களுமே கொள்ளை, கடத்தல் ஆகியவற்றை மையமாக வைத்தே படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இது சமூகத்தினை மோசமாக மாற்றும் என திரை விமர்சகர் பிஸ்மி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ச்சியாக சினிமாவில் ஹிட் கொடுத்து வந்த ஜெய்லர், புஷ்பா, பீஸ்ட், கே.ஜி.எஃப் ஆகிய படங்கள் எல்லாமே கொள்ளை, கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. ஆனால் எல்லா படங்களுமே வசூல் வேட்டை செய்தது. இது கண்டிப்பாக சமூகத்துக்கு நல்ல விஷயமாக இருக்காது. பெரிய பிரச்னையை உருவாக்கும்.

இதையும் படிங்க : 600 கோடி வசூலையே நெருங்க திணறும் ரஜினி படம்!.. அசால்ட்டா அத்தனை கோடி பட்ஜெட்டில் நடிக்கும் கமல்?..

இதுகுறித்து பிஸ்மி பேசி இருக்கும் பேட்டியில் இருந்து, ஜெய்லர் படத்தில் காட்சிகள் அனைத்துமே கொடூரமாக அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு காட்சியில் வில்லன் ஒருவரை அடித்து மண்டையை உடைத்து விட்டு உள்ளே கைவிட்டு மண்டையில் இருக்கும் மூளையை குடைவார். இது எவ்வளவு பெரிய வக்கிரம் தெரியுமா? இன்னொரு காட்சியில் முண்டமாக ஒரு மனிஷ உருவத்தினை நிற்க வைத்து காட்சிகள் இருக்கும்.

சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தான் இந்த படங்கள் எடுக்கிறது எனக் கூறி கொண்டாலும், மேலும் மோசமாக்கும் போக்காகவே பார்க்கப்படுகிறது. ஏன் அத்தனை கொடூர காட்சியை வைக்க வேண்டும். சமூகத்தில் இருக்கும் ஒருவர் படத்தினை பார்த்து திருந்தினேன் எனக் கூறினால் பரவாயில்லை.

இதையும் படிங்க : கால் சென்டர்ல கமல்ஹாசன்!.. அமெரிக்காவுல என்னை வேலை பண்ணிட்டு இருக்காரு பாருங்க ஆண்டவர்!..

எதும் தப்பு செய்து விட்டு போலீஸில் மாட்டி அந்த படத்தினை பார்த்து தான் இது செய்தேன் என சொல்லிய கதைகள் தான் இங்கு ஏராளமாக இருக்கிறது. அதற்கு சமீபத்தில் ரிலீஸான ஜெய்லர் பெரிய சாட்சியாக அமைந்து இருக்கிறது. லோகேஷ் படத்திலும் வன்முறை காட்சிகள் அமைக்கபடுகிறது.

ஆனால் அவர் டூகே கிட்ஸ்களை மையமாக வைத்தே தன்னுடைய கதையை நகர்த்துகிறார். இதனால் எந்த இடத்திலும் அளவுக்கு அதிகமாக கொடூர காட்சிகளை இதுவரை பார்க்க முடியவில்லை. லியோ படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் இருக்காது என நம்புவதாக தெரிவித்து இருக்கிறார்.

Next Story