Connect with us

Cinema News

இந்த முறையும் விஜய்க்கு ஆப்பு இருக்குமா?.. ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிள் டைட்டில் என்னன்னு பாருங்க!..

லியோ படத்தில் அதிகமாக பாடல்களை போடும் வாய்ப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மறுத்து விட்ட நிலையில், காண்டான இசையமைப்பாளர் அனிருத் ஜெயிலர் படத்தில் தொடர்ந்து பெரிய பெரிய சம்பவங்களாக செய்து வருகிறார்.

தளபதி விஜய்யின் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “நா ரெடி” பாடலுக்கு ஆப்பு அடிக்கும் விதமாக ஜெயிலர் படத்தின் காவாலா ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இதுவரை 70 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது.

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமன்னாவுக்காக ஓடுது என விஜய் ரசிகர்கள் வெட்கமே இல்லாமல் ட்ரோல் பண்ணி வந்த நிலையில், இரண்டாவதாக இறக்கப்பட்ட செகண்ட் சிங்கிளான ஹுகும் பாடல் இரக்கமே இல்லாமல் நேரடியாகவே நடிகர் விஜய்யை தாக்கியது போலவே இருந்தது.

திருப்பிக் கொடுக்க ஆரம்பித்த ரஜினிகாந்த்: 

சிவாஜி படத்தில் லத்தியால் அடிக்கும் போது ஒண்ணு, ரெண்டு, மூனு என சூப்பர்ஸ்டார் எண்ணியபடியே திருப்பிக் கொடுக்கணும்ல எனக் கூறும் வசனம் ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்தது.  சமீபத்தில் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான சர்ச்சை வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருந்து மிகப்பெரிய அளவில் வெடித்து நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்றும் அவர் தான் இப்போ சூப்பர்ஸ்டார் என்றும் ரஜினிகாந்த் ரிட்டயர்ட் சூப்பர்ஸ்டார் என ஏகப்பட்ட பேச்சுக்கள் கிளம்பின.

அதற்கு காரணம் ரஜினிகாந்த் நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த படங்கள் பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெறவில்லை. அதே நேரத்தில் விஜய் நடிக்கும் படங்கள் எல்லாம் சுமாராக இருந்தாலே 300 கோடி வசூல் ஈட்டி வந்த நிலையில், விஜய் ரசிகர்கள் இப்படி பில்டப் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

ஹுகும் பாடல் மூலம் மரண அடி: 

அதற்கு எல்லாம் சேர்த்து வைத்தது போல ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிளான டைகர் கா ஹுகும் பாடலில் நடிகர் ரஜினிகாந்துக்காக எழுதப்பட்ட நிரந்தர சூப்பர் ஸ்டார், உங்கப்பன் விசில கேட்டவன், உன் அலும்ப பார்த்தவன் போன்ற வரிகள் நேரடியாகவே நடிகர் விஜய்யை தாக்குவது போல இருந்ததாக விவாதங்கள் வெடித்தன.

மேலும், டைரக்ட்டாவே பெயரை கெடுக்க 4 பேர், பட்டத்தை பறிக்க 100 பேர் போன்ற வரிகளையும் சூப்பர் சுப்பு எழுதி அனிருத் இசையில் மிரட்டி விட்டிருந்தார்.

3வது சிங்கிள் ஜுஜுபி: 

இந்நிலையில், அனிருத் இசையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள 3வது சிங்கிள் பாடலுக்கு ஜுஜுபி என வெறித்தனமாக டைட்டில் வைத்துள்ளனர். இந்த பாடல் ஜூலை 26ம் தேதி வெளியாகிறது என்கிற அப்டேட்டை சற்றுமுன் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

வரும் ஜூலை 28ம் தேதி ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், 3வது சிங்கிள் மூலமாக மீண்டும் விஜய்க்கு பதிலடி இருக்குமா? என ரஜினி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அலப்பறையை கெளப்பி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top