More
Categories: Cinema News latest news

ஜெயிலர் பட வசூல்!.. கமலை பெருமூச்சு விட வைத்த சன் பிக்சர்ஸ்!.. என்னமா உருட்டுனாய்ங்க!…

ஜெய்லர் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. படம் மாபெரும் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நெல்சன் ஒரு கடவுள் போல மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு நெல்சனை ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். இந்த கொண்டாட்டத்திற்கு நடுவில் ரஜினி இமயமலை சென்றுள்ளார்.

அவர் திரும்பி வந்ததும் ஒரு மாபெரும் வரவேற்பு ரஜினிக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மூன்று நாள் வசூல் இத்தனை கோடி. நான்கு நாள் வசூல் இத்தனை கோடி என ஒவ்வொரு நாளும் இணையத்தில் தாறுமாறாக கணக்கு காட்டப்பட்டு வருகின்றது.

Advertising
Advertising

இதையும் படிங்க: யாருமே என்ன நம்பல.. அப்போ ரஜினி ஒன்னு சொன்னார்.. நெகிழ்ந்து போன நெல்சன்….

கிட்டத்தட்ட நான்கு நாட்களில் 350 கோடி வசூலை பெற்று விக்ரம் படத்தின் சாதனையை ஜெயிலர் படம் முறியடித்து விட்டது என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் அவை எல்லாமே ஒரு யூகத்தின் அடிப்படையில் காட்டப்பட்ட செய்திகள் தான் என திருப்பூர் சுப்ரமணியன் கூறி இருக்கிறார்.

உண்மையிலேயே உலகம் முழுவதும் வசூல் செய்த சாதனை எவ்வளவு என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மட்டுமே தெரியும் என்றும் சொல்லி இருக்கிறார். மேலும் தயாரிப்பு சம்பந்தப்பட்ட ஒருவரிடம் திருப்பூர் சுப்பிரமணியன் கேட்டபோது அவர்கள் தரப்பில் “சார் கண்டிப்பாக ஒரு பெரிய ஷேர் வரும் என்றும் ஒரு வாரத்திலேயே தமிழ்நாட்டு டிஸ்ட்ரிபியூட்டருக்கு மட்டும் 60 கோடி லாபம் கிடைக்கும்” என்றும் கூறினார்களாம்.

அதனால் கிட்டத்தட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனமே வெளியிட்டு இருப்பதால் இன்று வரைக்கும் அவர்களுக்கு 100 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும். அதனால் இந்த படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம் எனக் கூறினார். மேலும் ஓவர் ஆளா அதாவது உலகம் முழுவதும் உள்ள சாதனை பற்றி கூறிய போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் கேரளா, கர்நாடகா மற்றும் ஓவர்சீஸ் இவைகளுக்கு படத்தை விற்று விட்டார்களாம்.

இதையும் படிங்க : மொத்த பணத்தையும் சுருட்டி போயஸ் கார்டனில் வீடு! தயாரிப்பாளரை இளிச்சவாயாக்கி சுகம் காணும் ஜெயம்ரவி

அதுவும் எந்த ரேட்டுக்கு விற்றார்கள் அல்லது அவுட்ரேட்டுக்கு விற்றார்களா என்பதை பொறுத்து தான் சொல்ல முடியும். ஒரு வேளை அவுட் ரேட்டுக்கு விற்றால் எவ்வளவு வசூல் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கே தெரியாது. ஆனால் உலகம் முழுவதும் அவங்களே ஓன் ரிலீஸுக்கு விற்றிருந்தால் அதைப்பற்றி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தெரியும். ஆக மொத்தம் எவ்வளவு வசூல் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே உண்மையான வசூல் எவ்வளவு என்பதை சொல்ல முடியும் என கூறினார்.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த அதிகாரப்பூர்வ செய்தியை சமூக வலைதளங்களில் அறிவித்தது. அதாவது ரிலீஸ் ஆகி ஒரு வார காலத்தில் ஜெய்லர் திரைப்படம் 375.40 கோடியை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்குள்ளாக இணையத்தில் 4 நாள்களில் விக்ரம் பட சாதனையை முறியடித்த ஜெய்லர் திரைப்பம் என்றெல்லாம் உருட்டிவிட்டார்கள்.

Published by
Rohini

Recent Posts