More
Categories: Cinema News latest news

ரிலீஸுக்கு முன்பே விஜய் படத்தை காலி செய்த ஜெயிலர்… செம மாஸ் காட்டும் தலைவர்!..

இந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு காரணமே யார் படம் அதிக வசூல் செய்கிறது என்றதில் தான் தொடங்கியது என்றே கூறலாம். விஜய் படம் தான் அதிகமாக வசூல் செய்கிறது. எனவே, அவர் தான் சூப்பர் ஸ்டார் என்று சிலர் கூறியதால் தான் பஞ்சாயத்தே தொடங்கியது. இந்த நிலையில், அமெரிக்காவில் ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே, வாரிசு படத்தின் மொத்த வசூலை முந்திவிட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

வெளியாவதற்கு முன்பே எப்படி முந்த முடியும் என்று யோசிக்கிறீர்களா? வெளிநாடுகளில் படத்திற்காக முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த நிலையில், அமெரிக்காவில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படம் 1.5 மில்லியன் வசூல் செய்தது. ஆனால் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பே வெறும் முன்பதிவில் மட்டுமே 1.8 மில்லியன் ரூபாய் வசூல் செய்துவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

இதையும் படிங்க- இது எல்லாமே அவர பாத்து வந்திச்சி!. தளபதியின் அரசியலுக்கு விதை போட்ட அந்த நடிகர்!…

எனவே, படம் வெளியான பிறகு இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் முதலிடத்தில் உள்ளது. விரைவில் இந்த ரெக்கார்டை முறியடித்து, ஜெயிலர் முதலிடத்தை பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது. இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் என்ட்ரிக்கு முன்பே சாதனை படைப்பது தான் தலைவர் ஸ்டைல் என்று கூறி வருகின்றனர்.

மேலும் இந்தியாவில் எப்போது படத்திற்காக முன்பதிவு தொடங்கும் என்று காத்திருக்கின்றனர். இன்று மாலை 6 மணிக்கு வெளியான ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினி ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர். இந்த ட்ரெய்லரும் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து மற்றொரு சாதனையை படைக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க- மரணமாஸ் முத்துவேல் பாண்டியன்… தீயாக தெறிக்கும் ‘ஜெயிலர்’ டிரெய்லர் வீடியோ..

Published by
prabhanjani

Recent Posts