Cinema News
சன் டேவா சூப்பர்ஸ்டார் டேவா!.. பொன்னியின் செல்வன் 2 வாழ்நாள் வசூலுக்கு வேட்டு!..
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் சன் டே அதுவுமா பீச், பார்க்குன்னு எங்கேயும் போகாமல் உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஜெயிலர் படத்தை தியேட்டரில் பார்க்க படையெடுத்துள்ளனர். அதன் விளைவு முதல் நாளை விட ஞாயிற்றுக்கிழமை வசூல் மட்டுமே 100 கோடி ரூபாய் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்த நிலையில், 2வது நாளில் இருந்தே படத்துக்கு கூட்டம் குறையத் தொடங்கியது. ஆனாலும், முதல் வாரத்தில் அந்த படம் செய்த வசூல் தான் 200 கோடி பாக்ஸ் ஆபிஸை எட்டக் காரணமாக இருந்தது.
இதையும் படிங்க: தலைவரு நிரந்தரம்!.. நிரூபித்த ரஜினி!.. ஜெயிலர் 3 நாள் மொத்த வசூல் இத்தனை கோடியா?!…
300 கோடி வசூல் ஈட்டிய ஜெயிலர்:
ஆனால், ஜெயிலர் திரைப்படம் 3 நாட்களில் 200 கோடி வசூலை கடந்த நிலையில், 4வது நாள் இரவு ஷோவுக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் நிறைந்த நிலையில், அதிரடியாக 300 கோடி வசூலை ஜெயிலர் திரைப்படம் கடந்து விட்டதாக ஆச்சர்யமூட்டும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன.
திங்கட்கிழமை மற்றும் சுதந்திர தின விடுமுறையுடன் தான் 300 கோடி வசூலை உலகம் முழுவதும் ஜெயிலர் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் வாரத்தின் முடிவிலேயே 300 கோடி வசூலை மும்மூர்த்திகளான ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால் துணை கொண்டு வேட்டையாடி இருக்கிறது ஜெயிலர் என்கின்றனர்.
இதையும் படிங்க: ஜெயிலர் பார்த்துட்டு கண் கலங்கிய கன்னட சூப்பர்ஸ்டார்!.. அந்த அளவுக்கு என்ன நடந்தது தெரியுமா?..
வாரிசு, PS2 வசூல் சாதனை முறியடிப்பு:
தமிழ்நாட்டில் மட்டும் 4 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை ஜெயிலர் அசால்ட்டாக தாண்டியுள்ளதாகவும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் ஜெயிலர் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு எழுந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூல் காவாலா டான்ஸ் போல கலக்கல் ஆட்டம் போட்டு வருவதாக கூறுகின்றனர்.
இந்த ஆண்டு வெளியான விஜய்யின் வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இரண்டுமே 300 கோடி வசூலை பெற்ற நிலையில், முதல் வாரத்திலேயே அந்த இரு படங்களின் வாழ்நாள் வசூலையும் ஜெயிலர் திரைப்படம் முறியடித்து விட்டதாக கோலிவுட்டில் பலரும் இன்பதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.
இதையும் படிங்க: பிக் பாஸ் சீசன் 7க்கு ரெடியான நெல்சன் பட நடிகை!.. பெட்டில் சும்மா என்னம்மா சூடா இருக்காரு!..
விக்ரம், பொன்னியின் செல்வன் அடுத்த டார்கெட்:
அடுத்ததாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் 420 கோடி வசூலையும், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் 500 கோடி வசூலையும் அடுத்த வார இறுதிக்குள் ஜெயிலர் பீட் செய்து விட்டு மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேகத்தில் ஜெயிலர் படம் ரிப்பீட் ஆடியன்ஸ் உடன் சென்றால், ஷாருக்கானின் பதான் செய்த 1000 கோடி வசூல் சாதனைக்கு ஆப்பு வைக்குமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
ஆனால், இந்தியில் வெளியான கதர் 2 மற்றும் அக்ஷய் குமாரின் ஓ மை காட் 2 உள்ளிட்ட படங்கள் வசூல் வேட்டையாடி வரும் நிலையில், தென்னிந்தியா மற்றும் ஓவர்சீஸ் வசூலை மட்டுமே ஜெயிலர் திரைப்படம் நம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர் படங்கள் இந்தி