மார்க்கெட் போகும் என முன்பே கணித்த ஜெய்சங்கர்!. அதற்காக அவர் செய்ததுதான் ஹைலைட்!…

Published on: December 12, 2023
jaishankar
---Advertisement---

Jaishankar: தமிழ் சினிமாவில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் ஜெய்ஷங்கர். இவர் இரவும் பகலும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் தனது நடிப்பினை மிகச்சிறப்பாக வெளிக்காட்டினார்.

இவர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரும் கூட. இவர் மேலும் யார் நீ?, பொம்மலாட்டம், பூவா தலையா போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளாத்தையே உருவாக்கினார். எம்ஜிஆர், சிவாஜி போன்ற பல நடிகர்கள் முன்னணியில் இருந்தாலும் மக்கள் மனதில் நல்ல வரவெற்பை பெற்றவர் நடிகர் ஜெய்ஷங்கர்.

இதையும் வாசிங்க:எம்.ஜி.ஆர் விஷயத்தில் கண்ணதாசனை எச்சரித்த சோ… கவிஞரையே மன்னிப்பு கேட்க வைத்ததுதான் ஹைலைட்…

இவர் என்னதான் திரைப்படங்களில் நடித்தாலும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். தன்னிடம் உதவி என வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து தருவாராம். மற்றவர்களுக்கே உதவி செய்பவர் என்றால் தன்னுடன் இருப்பவர்களுக்கு எந்த அளவு உதவி செய்வார் என்பது இவர் செய்த ஒரு செயலின் மூலம் நமக்கு புரியும்.

ஜெய்ஷங்கருடன் இருந்த நிர்வாகிதான் ராஜாராம். இவர் பல வருடங்களாய் இவருடன் இருந்து வந்துள்ளார். ஒரு நாள் ஜெய்ஷங்கர் திடீரென அவரை அழைத்து தி-நகரில் எல்ஐசி முகவர் ஒருவரிடம் உன்னை பற்றி சொல்லியிருக்கிறேன்… அவரை போய் சந்தித்தால் உனக்கு எல்ஐசி ஏஜெண்டாக வேலை கிடைக்கும் என கூறியுள்ளார். அதை கேட்ட அவரது நிர்வாகிக்கு மிகுந்த குழப்பம் ஏற்பட்டதாம்.

இதையும் வாசிங்க:எம்ஜிஆரை கிண்டலடித்த சிவாஜி.. பதிலுக்கு புரட்சித்தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

உடனே ஜெய்ஷங்கரிடம் ‘நான் ஏது தவறு செய்துவிட்டேனா… எதற்காக என்னை வேலையை விட்டு அனுப்ப பார்க்கிறீர்கள்?’ என கேட்டாராம். உடனே ஜெய்ஷங்கர் அவரிடம் ‘உன்னை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என நான் நினைக்கவில்லை… இன்று எனக்கு நிறைய பட வாய்ப்புகள் இருக்கலாம்… ஆனால் நாளை ஒரு வேளை படவாய்ப்பு ஏதும் இல்லாமல் போனால் அந்த நேரத்தில் உனக்கு இந்த வேலை உதவியாய் இருக்கும்.

அல்லது எனது பெயரை உபயோகப்படுத்தி நீ நிறைய பேரை எல்ஐசியில் சேர்க்கலாம்’ என கூறியுள்ளார். அவர் சொன்ன சொல் கடைசியில் பழித்தும்விட்டது. ஒருகட்டத்தில் அவர் கூறியது போலவே பட வாய்ப்புகளும் குறைந்து விட்டன. தனக்கு பின்னாளில் நடப்பதை முன்கூட்டியே கணித்துள்ளார் ஜெய்ஷங்கர்.

இதையும் வாசிங்க:ஏன்டா நடிச்சோம்னு ஆயிடுச்சி!. மணிரத்னம் பட அனுபவம் சொல்லும் பிரபல நடிகை…

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.