“நீ நடிகனாகனுமா? வேண்டாமா?”… உலக நாயகனை உசுப்பேத்திவிட்ட ஜெய்ஷங்கர்… அன்னைக்கு மட்டும் அது நடக்கலைன்னா??
தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த ஜெய்ஷங்கர், தனது தனித்துவமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்டவராக ஜொலித்து வந்தார். எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகியோர் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலும் கூட மக்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்திருந்தார் ஜெய்ஷங்கர்.
என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் ஆகியோரின் வரிசையில் கொடை வள்ளலாக திகழ்ந்தவர் ஜெய்ஷங்கர். உதவி என்று நாடி வருபவர்களுக்கு மட்டுமல்ல, ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களையும் கூட தேடிச் சென்று பல உதவிகளை செய்துள்ளார் ஜெய்ஷங்கர். மேலும் தனது சக நடிகர்களுக்கு தகுந்த மரியாதையை கொடுத்து, பெருந்தன்மையாகவும் நடந்துகொண்டவர் ஜெய்ஷங்கர். இந்த நிலையில் ஒரு நாள் ஜெய்ஷங்கர், கமல்ஹாசனை சந்தித்ததையும், அப்போது கமல்ஹாசனின் வாழ்க்கையையே அவர் திருப்பிப்போட்டதையும் குறித்து இப்போது பார்க்கலாம்.
உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமல்ஹாசனின் அசாத்திய திறமைகள் குறித்து நாம் பலரும் அறிவோம். தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்த கமல்ஹாசன், தனது பதின் பருவத்தில் ஒரு நடன இயக்குனரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். ஒரு முறை ஜெய்ஷங்கர் நடிக்கும் திரைப்படம் ஒன்றில் நடன உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார் கமல்ஹாசன்.
இதையும் படிங்க: “கமல் சாகுறத என்னால பாக்க முடியல”… தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுத மனோரமா…
அப்போது படப்பிடிப்பில் கமல்ஹாசனிடம் பேசிய ஜெய்ஷங்கர் “நீ எவ்வளவு நாட்களுக்குத்தான் திரைக்கு பின்னாலேயே இருக்கப்போகிறாய். நீ நடிகராக ஆக வேண்டாமா? இப்படியே ஒரு டெக்னீஷீயனாக உன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப்போகிறாயா கமல்? நீ நிச்சயமாக நடிக்க வரவேண்டும்” என ஊக்கமளித்திருக்கிறார்.
அதற்கு பிறகுதான் கமல்ஹாசனுக்கு, தான் ஒரு நடிகராக ஆகவேண்டும் என்ற உத்வேகம் வந்ததாம். தற்போது உலக நாயகனாக திகழ்ந்து வரும் கமல்ஹாசன் என்ற அணையா விளக்கை, பல ஆண்டுகளுக்கு முன்பு தூண்டிவிட்டவராக ஜெய்ஷங்கர் திகழ்ந்திருக்கிறார்.