ஜெய்சங்கர் ஆசைப்பட்ட அந்த விஷயம்!. இப்போது வரை நிறைவேற்றி வரும் மகன்!.. செம கிரேட்டு!...
எம்.ஜி.ஆர், சிவாஜி தமிழ் சினிமாவில் கோலோச்சிகொண்டிருந்த போதே ஒருபக்கம் மினிமம் பட்ஜெட்டில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஜெய்சங்கர். பல பேரை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தவர் இவர். இவரின் படம் என்றாலே படப்பிடிப்பு தளம் கலகலப்பாக இருக்குமாம்.
லைட்பாய் வரை எல்லோரிடமும் ஜாலியாக கலகலப்பாக பேசும் பழக்கம் உடையவர் இவர். ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட் 007 போல தமிழில் பல துப்பறியும் படங்களில் நடித்தவர். அதனால் இவரை தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் எனவும் அழைப்பார்கள். ஒருவரை தயாரிப்பளராக்க வேண்டும் என ஜெய்சங்கர் ஆசைப்பட்டால் அதற்கான எல்லா வேலைகளையும் அவரே செய்வார்.
இதையும் படிங்க: முதல்வரான பின்பும் ஜெ.வை ஜெய்சங்கர் இப்படித்தான் அழைப்பார்!.. சீக்ரெட் சொன்ன உதவியாளர்!..
அதாவது சம்பளம் வாங்காமல் நடித்து கொடுப்பார். அதேபோல், அந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளிடம் பேசி ‘சம்பளம் வாங்காமல் நடித்து கொடுங்கள், படம் முடிந்து விற்பனை ஆனதும் சம்பளம் வாங்கி கொள்வோம்’ என சொல்லி அவர்களையும் சம்மதிக்க வைப்பார். அதேபோல், அப்போது நடிகையாக இருந்த ஜெயலலிதாவிடம் நெருங்கி பழகிய ஒரே நடிகர் ஜெய்சங்கர் மட்டுமே. இதனால் எம்.ஜி.ஆரின் கோபத்திற்கும் ஆளானார்.
ஜெய்சங்கர் நடித்து 1974ம் வருடம் வெளியான திரைப்படம் ‘இதயம் பார்க்கிறது’. இந்த படத்தில் கண்பார்வை இல்லாதவராக ஜெய்சங்கர் நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்தபோதுதான் கண்பார்வை இல்லாதவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்கிற எண்ணம் அவருக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: எம்ஜிஆரின் சூட்டிங்கிலிருந்த நடிகையை ஆள் அனுப்பி அழைத்து வர சொன்ன ஜெய்சங்கர்! நடக்குமா?
எனவே, அப்போதே அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியுள்ளது. தனது மகன் விஜய சங்கரை கண் மருத்துவராக படிக்க வைத்து கண்பார்வை குறைபாடு உடைய ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டாராம். அதை தன் மகனிடம் சொல்லியே அவரை கண் மருத்துவமும் படிக்க வைத்தார்.
அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய அவரின் மகன் ஜெய்சங்கர் பெயரில் ஒரு அறக்கட்டளையை துவக்கி இப்போது வரை ஏழைகளுக்கு இலவசமாக கண் சிகிச்சையை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜெய்சங்கர் மீது எம்ஜிஆருக்கு இருந்த பொறாமை!.. படப்பிடிப்பில் துப்பாக்கியுடன் சென்ற சின்னவர்..