james vasanthan

அரசியல் சார்ந்த மேடைகளிலோ அல்லது செய்தியாளர்கள் சந்திப்பின்போதோ தனிநபர் விமர்சனங்கள் எல்லை மீறுவது சமீபகாலமாகத் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் மற்றும் த்ரிஷாவை இணைத்து பேசிய தரம் தாழ்ந்த கருத்துக்களுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் திரையுலகைச் சேர்ந்த சங்கங்களோ அல்லது முன்னணி நட்சத்திரங்களோ குரல் கொடுக்கத் தயங்கிய நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் துணிச்சலாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

ஆவர் தனது முகநூல் பக்கத்தில் நயினார் நாகேந்திரன் அடிப்படையில் பண்பானவர்தான். தவறாகப் பேசக்கூடிய ஆளில்லை.
ஆனால் அவர் சேர்ந்திருப்பது ஒரு அசிங்கக் கூடாரம். அது இப்படித்தான் மாற்றும் யாரையும்.
பன்றியோடு கன்று சேரும்போது, பன்றி வைக்கோல் தின்னக் கற்பதில்லை; கன்றுதான் “அதை” தின்னக் கற்கும் என்பது ஊர்மொழி.
விஜய்யை அரசியல் ரீதியாக எதிர்க்கத் துணிவின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையைக் கொச்சையாகப் பேசுவது கொஞ்சம்கூட ஏற்புடையதல்ல. இதை ஒருத்தன் கூட ஒத்துக்கொள்ள மாட்டான். அப்படிப் பார்த்தால், எல்லா அரசியல் தலைவர்களின் வாழ்க்கையையும் விமர்சிக்க முடியுமே. பிரம்மச்சாரி என்று காட்டிக்கொள்கிற மோதி அடிக்காத கொட்டமா? அது உங்களுக்கும் தெரியும். அதுவா அரசியல்?


பேசாமல் மன்னிப்பு கேட்டுவிடுங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது; தமிழ்நாட்டு அரசியலுக்கும் நல்லது. நீங்கள் கடைநிலைத் தொண்டனில்லை, எதையாவது பேசிவிட்டு அப்படியே செல்வதற்கு. நீங்கள் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். நீங்கள் மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டும். அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை என்று பதிவு செய்துள்ளார்.

திரிஷா குறித்து மன்சூஅர் அலிகான் தவறாக பேசியபோது அனைத்து திரையுலகினர் பலரும் மன்சூருக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் திரையுலகினர் மௌனம் காப்பது ஏனோ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.