இயக்குனருடன் போட்ட சண்டை... ஜனகராஜை கமல் ஒதுக்கியதற்கு காரணம் இதுதானாம்!..

janagaraj
80,90களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ஜனகராஜ். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என அப்போதையை முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் ஜனகராஜ் இருப்பார். இயக்குனர்கள் கதையை எழுதும்போதே ஜனகராஜுக்கு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி விடுவார்கள்.
அந்த அளவுக்கு தனது குரல், நடிப்பு மற்றும் உடல் மொழியால் ரசிகர்களை கவர்ந்துவிடுவார் ஜனகராஜ். ரஜினியின் பல திரைப்படங்களில் ஜனகராஜ் நடித்திருக்கிறார். பணக்காரன் படத்தில் ரஜினியின் நண்பராக வந்து சிரிக்கவைத்தார். மேலும், பாண்டியன், ராஜாதி ராஜா, அண்ணாமலை, அருணாச்சலம், பாட்ஷா, வீரா என பல படங்களிலும் ஜனகராஜை பார்க்கலாம்.
இதையும் படிங்க: நான்லாம் உலக நாயகன் இல்ல!.. அவங்கதான்!.. கமல்ஹாசன் பட்டியலிட்ட திரை பிரபலங்கள்!..
இதில் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் கலக்கி இருப்பார். அதேபோல், ஒருபக்கம் 90களில் கமலின் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் ஜனகராஜ் நடித்திருக்கிறார். இதற்கு நாயகன் படமே மிகப்பெரிய சாட்சி. அந்த படத்தில் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக கலக்கி இருப்பார்.
அதேபோல், அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன் செய்யும் கொலைகளை துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வந்து சிரிக்க வைத்திருந்தார். குணா படத்தில் அவர் செய்த வேடம் அசத்தலாக இருக்கும். ஆனால், அதன்பின் அவர் கமலின் படங்களில் நடிக்கவில்லை. இதுபற்றி யாரும் பெரிதாக யோசிக்கவும் இல்லை. ஆனால், அதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது.
குணா படத்தை இயக்கியது கமலின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான சந்தானபாரதி. இந்த படத்தின் டப்பிங்கின் போது ஜனகராஜ் அவர் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசினார். ஆனால், ‘இது நல்லா இல்ல.. மறுபடியும் பேசு’ என சந்தானபாரதி சொல்ல, ஜனகராஜ் மீண்டும் பேசினார். ‘இதுவும் நல்லா இல்ல.. மறுபடியும் பேசு’ என சந்தானபாரதி மீண்டும் மீண்டும் சொல்ல ஜனகராஜுக்கு கோபம் வந்துவிட்டது. இருவரும் விளையாட்டாக பேசியது சண்டையாக மாறிவிட்டது.
இதையும் படிங்க: தேவர் மகனில் சிவாஜிக்கு பதில் அவர்.. ரேவதிக்கு பதில் இன்னொரு நடிகை!.. கடைசியில் கமல் செய்த மாற்றம்!..
அவர் ஒன்று சொல்ல, இயக்குனர் ஒன்று சொல்ல அந்த அறையிலிருந்து ஜனகராஜ் வெளியே வந்துவிட்டார். தொடர்ந்து அவரிடம் வந்து சந்தானபாரதி சண்டை போட அது கைகலப்பாக மாறிவிட்டது. இது கேள்விப்பட்ட பின்னர்தான் கமல் தனது படங்களில் ஜனகராஜ் நடிப்பதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.

santhana
ஜனகராஜிடம் ஒரு பழக்கம் உண்டு. அவர் நடிப்பது நன்றாக இல்லை என இயக்குனர் சொன்னால் மீண்டும் நடித்து காட்டுவார். ‘சரியில்லை’ என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தால் மிகவும் கோபப்படுவார். பலமுறை படப்பிடிப்பு தளங்களில் இயக்குனர்களிடம் அவர் சண்டை போட்டிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘ஆளவந்தான்’ பட விஷயத்தில் கமலை திட்டிய தாணு! ஆனா நடந்த சம்பவமே வேற!.. இது தெரியாம போச்சே!..